(பினாங்கு) எனது போராட்டத்தின் ஒரு பகுதியாகவே ‘சிறை’ இருந்துள்ளது. சிறைச்சாலையில் நான் தள்ளப்பட்டாலும்கூட அந்த கடுமையான வலியை எதிர்கொள்ள என்னை தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறேன் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். தனது அரசியல் வாழ்க் கையை அஸ்தமனமாக்குவதற்கு அரசியல் சதிகள் நடந்திருக்கின்றன என்று லிம் உறுதியாகக் கூறுகிறார். தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை நாள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் சிறைச் சாலை செல்வதுதான் தனது தலை விதியாக இருக்குமானால் தனது நான்கு பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கண்டுதான் மனம் வருந்து வதாக குறிப்பிடுகிறார். மூவர், 20 வயதில் இருக்கும் வேளையில் கடைசிப்பிள்ளைக்கு 10 வயதாகிறது என்கிறார். ஒரு தந்தை என்ற முறையில் நான்கு பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாட்டை தாம் கொண்டிருந்த போதிலும் ஒரு மாநில முதலமைச்சர் என்ற முறையில் அவர்களை பாதுகாக்க இயலாது என்கிறார். சிறைச்சாலை என்பது என் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்று இரண்டு தவணை மலாக்கா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள 56 வயதான லிம் கூறுகிறார். ஜ.செ.க.வின் பொதுச் செயலாளரான லிம் குவான் எங், நேற்று கொம்தாரில் உள்ள தனது முதலமைச்சர் அலுவலகத்தில் மலே சியா கினிக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறினார். சிறைச்சாலைக்கு செல்வதும், தண்டனையை அனுபவிப்பதும் தனக்கு புதியது அல்ல என்று மிக அழுத்தமாக லிம் கூறுகிறார். துன் டாக்டர் மகாதீர் பிரத மராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் லாலாங்’ கைது நடவடிக்கையின் போது உள்நாட்டு பாதுகாப்பு சட் டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டு ஓராண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த அனுபவம் எனக்கு உண்டு. 1984 அச்சக மற்றும் வெளியீடு சட்டத்தின் கீழ் 1994 ஆம் ஆண்டு 18 மாத கால சிறைத்தண்டனையை அனுபவித்தேன். மலாக்கா அம்னோவின் மூத்த அரசியல்வாதியும் மாநில முதலமைச்சராக இருந்தவருமான டான்ஸ்ரீ ரஹிம் தம்பி சிக் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஒரு கற்பழிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட லிம் 18 மாத கால சிறைத்தண்டனையை அனுபவித்தார். தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது, தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய முன் னணியின் மிக மோசமாக பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் களங்கத்தை துடைத்துக்கொள்ள நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவிருப்பதாக குறிப் பிட்டார். இந்த வழக்கு விசாரணை 13 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் 60 சாட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் 2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் 62 விதியை எதிர்க்கும் வகையில் லிம் மேல் முறையீடு செய்து இருப்பதால் இந்த வழக்கு தற்போது ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சிறைக்கு அனுப்ப நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது குடும்பத்தினரை குறிப்பாக எனது கடைசிப்பிள்ளையை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்