(கோம்பாக்) போலீசுக்கு சொந்தமான எம்பிவி வகை காருடன் தப்பியோடிய ஆடவரை போலீசார் தேடி வருவதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அலி அஹ்மாட் நேற்று கூறினார்.பத்துகேவ்ஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றை இரு ஆடவர்கள் உடைக்க முயற்சிக்கின்றனர் என்று போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அக்கிடங்கை சோதனையிடும் நோக்கில் போலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினர்.போலீஸ் அதிகாரிகள் கிடங்கிற்குள் சென்றதுடன், திருட முயன்ற ஆடவன் ஒருவன் போலீஸ் வாகனத்துடன் தப்பியோடினான். மற்றொரு ஆடவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். சுமார் 1 மணி நேரத்திற்கு பின் அவ்வாகனத்தை போலீசார் லத்தார் நெடுஞ்சாலையில் கைப்பற்றினர்.சம்பந்தப்பட்ட ஆடவன் காரை அந்நெடுஞ்சாலையில் விட்டு சென்றுள்ளான். அவனை பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது என்று அலி அஹ்மட் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்