(கோத்தா திங்கி) கோத்தா திங்கி சமயப்பள்ளி மாணவன் ஒருவனை ரப்பர் குழாய் கொண்டு கால்களில் தாக்கிய பள்ளி விடுதி உதவி வார்டனை நீதிமன்ற கட்டுப்பாட்டில் 20 ஆயிரம் வெள்ளி பிணையில் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று விடுவிக்க அனுமதித்தது. மாணவனின் கால்களில் தாக்கிய சம்பவத்தால் கருப்பு நிறத்தில் கால்கள் மரத்து, கால்களை துண்டாக்கும் நிலை ஏற்பட்டு மரணம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக புகார் கூறப்பட்டு வரும் வேளையில் அந்த சந்தேக நபரை கோத்தா திங்கி குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் உதவி சூப்ரிண்டெண்டன் முகமட் பைரோஸ் இஸ்னின் விடுவிப்பதற்கான அனுமதி விண்ணப்பத்திற்கேற்ப செஷன்ஸ் நீதிபதி சலாவத்தி டி ஜம்பாரி உதவி வார்டனை விடுவிக்க அனுமதித்தார். முன்னதாக நேற்று நண்பகல் 12.17 மணிக்கு போலீசாரின் பாதுகாப்புடன் சந்தேக நபர் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார். சில நிமிடங்களில் அந்நபர் தனது உடன்பிறப்பு ஒருவருடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி னார். முன்னதாக தாப்பிஸ் சமயப்பள்ளி மாணவன் முகமட் தாஹிப் அமின் முகமட் கடாபி தாக்கப்பட்ட சம் பவம் தொடர்பில் மாணவனின் தாயார் செய்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் 29 வயது டைய அந்த உதவி வார்டனை போலீசார் கைது செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்