(காஜாங்) கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி முதல் வடக்கு தெற்கு விரைவுச்சாலை நடத்துநர்களான பிளஸ் நிறுவனத்தார் தங்களது எல்லா டோல் சாவடிகளிலும் கட்டண வசூலிப்பை மின்னியல் முறைக்கு மாற்றி அனைத்து வாகனமோட்டிகளும் ரொக்கப் பணம் செலுத்தாமல் டச் என் கோ அட்டை களையும் ஸ்மார்ட் டெக் கருவிகளையும் பயன்படுத்தி கட் டணம் செலுத்த ஏற்பாடு செய்தது அது நடைமுறைக்கு வந்துள்ளது. மின்னியல் அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் டோல் சாவடிகளில் நெரிசலை குறைக்க முடியும் என்ற காரணத்தாலும் வாகனமோட்டிகள் விரை வாக தங்களது இலக்குகளை அடைய முடியும் என்ற காரணத்தாலும் அந்த நிறுவனத்தார் முன்கூட் டியே பணம் வசூலிக்கும் நடை முறையை அமல் படுத்தி யுள்ளனர். மின்னியல் வசூலிப்பு முறையை அமல்படுத்தியும் நாட்டின் பிரதான டோல் சாவ டிகளில் இன்னமும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவது வேடிக்கையாக உள்ளது. இதற்கு பிளஸ் நிறுவனத்தின் அலட்சிய போக்கும் ஒரு காரணமாக உள்ளது. உதாரணத்திற்கு நேற்று காலையில் ஜாலான் டூத்தா டோல் சாவ டியில் உள்ள நான்கு ஸ்மார்ட் டெக் தடத்தில் இரண்டு மட்டுமே செயல்படுவதை காண முடிந்தது. நான்கையும் அந்நிறுவனத்தார் திறந்து விட்டிருந்தால் வாகனங்கள் விரைவாக செல்ல வழிவகுத்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக இரண்டு தடங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதை காண முடிந்தது. அந்த இரண்டிலும் அவ்வப்போது ஸ்மார்ட் டெக் சரிவர வேலை செய்யாமல் எல்லா வாகனங்களும் ஒரு தடத்தை மட்டுமே உபயோகிக்கத் தொடங்கியது கடும் நெரிசலை ஏற்படுத்தியது என இந்த நெரிசலில் சிக்கிக் கொண்ட அனித்தா என்ற வாகன மோட்டி தமது அதிருப்தியை தெரிவித்தார். பிளஸ் நிறுவனம் இன்னும் கூடுதல் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதே காரணத்தினை செல்வி என்ற வாகனமோட்டியும் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்