(ஈப்போ) ஓராண்டுக்கு முன்பு தனது ஒரு வயது மகளின் மரணம் குறித்து புது ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் போலீசார் புலன் விசாரணையை மீண்டும் தொடங்கக் கோரி தாயார் ஒருவர் போலீஸ் புகார் செய்துள்ளதோடு புலன் விசாரணைக்கு உத்தரவிடும்படி போலீஸ் படைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி எனது ஒரு வயது மகள் தேவதாரணி த/பெ லிங்கம் மருத்துவமனையில் மரணமுற்றார். இவரது மரணத்திற்கு வயிற்றின் உள் பகுதியில் ஏற்பட்ட ரத்தக் கசிவு என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடக்கத்தில் மகளின் மரணம் குறித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்ட போது என்னையும் என் தாயாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து 10 நாட்கள் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டனர் என்று தாயார் பரிமளா த/பெ ராமசாமி (வயது 36) கூறினார். சம்பவம் வீட்டில் நடந்த சமயம் நான் வேலைக்கு சென்று விட்டேன். வேலை இடத்தில் தகவல் கிடைத்து புந்தோங் அரசாங்க மருத்துவமனைக்கு வந்த போது மகள் இறந்துவிட்டதாக கூறினார் கள். அதிர்ந்து போனேன். நான் காலையில் வேலைக்கு செல்லும் போது மகள் நல்ல நிலையில் இருந்தார். பிறகு எப்படி இது நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்று போலீசாரிடம் தெரிவித் தேன். 10 நாள் தடுத்து வைக்கப்பட்ட பிறகு என்னையும் என் தாயாரையும் விடுவித்தனர். மரணமுற்ற மகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் முடியவில்லை. இறந்ததற்கு காரணம் கூறும் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் மரணத்திற்கு வயிற்றின் உள் பகுதியில் ஏற்பட்ட ரத்தக் கசிவு என்று குறிப் பிடப்பட்டிருந்தது என்பதன் அடிப்படையில் மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறி இரண்டு போலீஸ் புகார்கள் செய்தேன். புலன் விசாரணையை துரிதப்படுத்துவதில் மெத்தனப் போக்கு நிலவுகிறது. இவ்விவகாரத்தை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமாரிடம் கொண்டு சென்றோம். நேற்று பேரா ஜசெக அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் பரிமளா விவரங்களை தெரிவித்தார். கிரிமினல் சம்பவங்களில் புது ஆதாரங்களின் பேரில் போலீசார் புலன் விசாரணை தொடங்கலாம். இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. செய்யாத குற்றத் திற்காக 10 நாட்கள் தடுத்து வைத்து தாயாரையும் பாட்டியையும் விசாரித்த போலீசார் புது ஆதாரங்கள் பேரில் புலன் விசாரணையை தொடங்கலாம். போலீஸ் புகார் செய்யப்பட்டும் போலீசார் புலன் விசாரணையை தாமதப்படுத்துவது அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. தங்கள் மகளின் மரணத் திற்கு யார் காரணம் என்பதை தெரிந்து அவர்களை சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற அந்த தாயாரின் கண்ணீர் நியாயமானது தானே என்று சிவகுமார் கூறினார்.போலீஸ் படைத் தலைவருக்கு இவ்விவகாரம் குறித்து கடிதம் எழுதுவேன் என்றும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்