தகுதியுடைய மலேசியர் எவரும் பிரதமராக முடியும் என கூறுவது உட்பட உண்மையைப் பேச மக்கள், குறிப்பாக முஸ்லிம் அல்லாத அரசியல்வாதிகள் அஞ்சக் கூடாது என்று டத்தோ ஜாயிட் இப்ராஹிம் நேற்று ஒரு வலைத்தள பதிவில் குறிப்பிட்டார். ஒரு முஸ்லிம் மட்டுமே பிரதமராக முடியும் என்ற வகையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு ஏதுவாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி பாஸ் தலைமைத்துவத்தையும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்ளும் ஒரு தீர்மானத்தை பாஸ் அண் மையில் நடைபெற்ற தனது பொதுப் பேரவையில் நிறைவேற்றியதை மேற்கோள்காட்டி அவர் இக்கருத்தை வெளியிட்டார். பிரதமராக வர மலேசியர் எவரும் ஆசைபடலாம். நாடு செழிப்படைய விரும்பும் நம் அனைவராலும் இது ஆதரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.பிரதமர் பதவிக்கு வர ஒருவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி, அவர் நாட்டு மக்களில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருப்பதே என்று அந்த முன்னாள் அம்னோ அமைச்சர் கூறினார். பாஸ் தீர்மானம் தொடர்பில் பதிலளிக்க மலாய்க்காரர் அல்லாத அரசியல்வாதிகள் சிலர் மிகவும் கடினமாக முயற்சி செய்வதாகவும் ஜாயிட் குறிப்பிட் டார். பிரதமராக வருவதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என மலாய்க்காரர்களுக்கு முஸ்லிம்களுக்கு நினைவூட்டுவதில் மலாய்க்காரர் அல்லாத அரசி யல்வாதிகள் சிலர் கூடுதல் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பாஸ், அம்னோ, பெர்காசா, இஸ்மா, இதர என்ஜிஓ அமைப்புகளைப் பார்த்து பயப்படாதீர்கள் என்று கூறிய அவர், மலாய்க்கார வாக்காளர்களை கவர அம் னோவும் பாஸும் பயம் நிறைந்த தந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தும் என்று எச்சரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்