(காப்பார்)இங்கு ஜெரம், சுங்கைபூலோ பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்புப் பணிகள், பாதியிலேயே முடங்கி தாமதம் ஏற் பட்டிருப்பது பள்ளி பெற்றோர்களையும் வட்டார பொது மக்களையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்த 2015ஆம் ஆண்டு துணை கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் வெற்றிகரமாக நடத்தினார். திட்டமிட்டபடி 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் நிர்மாணிப்புப் பணி முடிவடைந்து மாணவர்கள் புதிய பள்ளி கட்டடத்திற்கு செல்வார்கள் என்று அடிக்கல் நாட்டு விழாவில் துணை அமைச்சர் கமலநாதன் உறுதி கூறியிருந்தார். இதன் நிர்மாணிப்புப் பணி துரித வேகத்தில் தொடங்கப்பட்டு 60 விழுக்காடு முடி வடையும் வேளையில் திடீரென்று நிர்மாணிப்புப் பணி கால தாமதமாகி வருகிறது. இவ்வாண்டு புதிய கல்வி ஆண்டில் மாணவர்கள் அந்த புதிய கட்டடத்தில் கல்வி பயின்று இருக்க வேண்டும். ஆனால், நிர்மாணிப்புப் பணி திடீரென்று சுணக்கம் ஏற்பட்டு தாமதமானதற்கு காரணம்தான் என்ன? என்ற நிலையில் பெற்றோர்களும் கேள்வி எழுப்பிய நிலையில் உள்ளனர். மரத் தூண்கள் மக் கிய நிலையில் கரையான்கள் அரித்தவாறு யுத்தகால கட்டடம் போல் காட்சித்தரும் பிரௌன்ஸ்டன் தமிழ்ப் பள்ளியில் எவ்வளவு காலத்திற்குதான் மாணவர்கள் கல்விப் பயின்று வரப் போகிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். பள்ளியின் நிர்மாணிப்புப் பணி தாமதமானதற்கு குத்தகையாளர் காரணமா? கல்வி அமைச்சு காரணமா? என்பது தெரிய வில்லை. ஆனால், 60 ஆண்டு கால வரலாற்றை கொண்ட பிரௌன்ஸ்டன் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்பு தாமதமான காரணத்தையும் அது நிவர்த்தி செய்யப்படும் காலத்தை உறுதி செய்யவும் துணை கல்வி அமைச்சர் கமலநாதன் விளக்க வேண்டும் அல்லது பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர். இவ்விவகாரத்தில் பி.கமலநாதன் மௌனம் காப்பது முறையல்ல என்றும் அவர்கள் கூறினர்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்