மூன்று மாணவர்களால் வாயில் விஷம் ஊற்றப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட 15 வயது மாணவன் சிகிச்சை பல னளிக்காமல் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சிரம்பான் துவாங்கு ஜப்பார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் பிரவின் த/பெ செல்வராஜூ மரணமடைந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் சூப்ரிண்டெண்டன் ஓசிபிடி ஜால்டினோ ஜாலுடின் உறுதிப்படுத்தினார். இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் திடீரென சூழ்ந்து கொண்டு கை கால்களை பிடித்து மாணவன் பிரவின் வாயில் பூச்சிக் கொல்லி விஷ மருந்தை வலுக்கட்டாயமாக ஊற்றியதால் வயிற்றுவலி தாங்க முடியாமல் வாந்தி எடுத்து வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறியதும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் கூறினார். கடந்த 26.4.2017 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நீலாய் நகரிலுள்ள இடைநிலைப்பள்ளியின் முன் நிகழ்ந்த இப்பரபரப்பான சம்பவம் தொடர்பாக பெற்றோர் உடனடியாக போலீஸ் புகார் செய்ததாக அவர் விளக்கினார். மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற, வாயில் விஷம் ஊற்றப்பட்ட மாணவன் பிரவின் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் பள்ளியிலிருந்து நின்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார். குற்றவியல் சட்டவிதி 328இன் கீழ் தீவிர புலன்விசாரணை முடக்கி விடப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை என்று போலீஸ் ஓசிபிடி ஜால்டினோ ஜாலுடின் குறிப்பிட்டார். நீலாய் தாமான் டேசா ஜாஸ்மின் குடியிருப்பைச் சேர்ந்த மாணவன் பிரவின் மர ணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொலை குற்றவியல் கீழ் கைது செய்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜ.அருள்குமார் கேட்டுக் கொண்டார். தகவல் கிடைத்ததும் மரணமடைந்த மாணவனின் இல்லத்திற்கு வந்த கல்வி துணையமைச்சர் டத்தோ சோங் சின் வோன் இச்சம்பவத்தை தீவிரமாக விசாரிக்க கல்வி அமைச்சு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்