பத்துகேவ்ஸ் அருகில் சுங்கை துவாவில் குறைந்த விலையில் வீடமைப்புத்திட்டம் உருவாக்கப்படுவதாக வெளியான தகவலை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் செலுத்திய 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அந்த வீடமைப்புத்திட்டம் உருவாகாததைக் கண்டு நேற்று கொதித்து எழுந்தனர். மொத்தம் 450 பேர் தலா 10 ஆயிரம் வெள்ளி முதல் 63 ஆயிரம் வெள்ளி வரை முன்பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இவர்களில் 90 விழுக் காட்டினர் இந்தியர்கள் ஆவர். இரண்டு வருடத்திற்குள் வீடமைப்புத்திட்டம் உருவாகிவிடும் என்று கூறப்பட்ட ஆசை வார்த்தைகளை நம்பி, பலர் முன் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், வீடமைப்புத்திட்டம் உருவாகவிருப்பதாக தங்களுக்கு காட்டப்பட்ட பகுதியில் இதுவரையில் ஒரு செங்கல்கூட நகர்த்தப்படாமல் இருப்பதை கண்டு மக்கள் வெகுண்டு எழுந்துள்ளனர். இது தொடர்பான விளக்கக் கூட்டம் நேற்று இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட போது, பணம் போட்டவர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சம்பந்தப்பட்ட கூட்டுறவுக்கழக பொறுப்பாளர்கள் திணறினர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கோலாலம்பூர் மஜ்முக் தொழிலாளர் கூட்டுறவுக் கழகம், பியோகோன் லேண்ட் சொத்துடைமை நிறுவனம் ஆகியவை இணைந்து சுங்கைத் துவாவில் மாபெரும் வீடமைப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தன. புகழ் பெற்ற ஒரு மேம்பாட்டு நிறுவனத்தின் முகவர்களாக கூட்டுறவுக் கழகமும், பியோகோன் லேண்ட் சொத்துடைமை நிறுவனமும் மக்களுக்கு அவ் வீடுகளை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. இரண்டு, மூன்று மாதிரி வீடமைப்புத் திட்டத்தை கொண்டு சுங்கைத் துவாவில் பிரமாண்ட திட்டம் உருவாக்கப்படவுள்ளது. அதுவும் குறைந்த விலையில் வீடுகள் கட்டப்படவுள்ளன என்று அக்கூட்டுறவுக் கழகம் விளம்பரம் செய்தது. கூட்டுறவுக் கழகத்தில் விளம்பரங்களை நம்பி நூற்றுக்கணக்கான (450க்கும் மேற்பட்டோர்) மக்கள் அங்கு வீடுகளை வாங்க முன் பணம் செலுத் தியுள்ளனர். திட்டமிட்டப்படி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முறையாக ஒப்படைக்கப்படும் என மக்கள் நம்பினர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவ் வீடுகளை கட்டுவதற்கான அடித்தளம் கூட அமைக்கப்படவில்லை என்றதும் மக்களிடையே பெரும் ஆட்சேபம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுக் கழகம் உட்பட மேம்பாட்டு நிறுவனங்கள் மீது போலீஸ் புகார்களை செய்தனர். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் சிறப்புக் கூட்டம் ஒன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோலாலம்பூர் மஜ்முக் தொழி லாளர் கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் மாறன், பியோகோன் லேண்ட் சொத்துடைமை நிறுவனத்தைச் சேர்ந்த சுமதி, வழக்கறிஞர்கள் சீலன், சுரேஷ் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விளக்கமளிக்க தொடங்கினர். கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் மாறன், சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் முகவராக தான் கழகம் செயல்பட்டது. மக்களிடம் இருந்து வசூலிக் கப்பட்ட 17 லட்சத்து 41 ஆயிரத்து 250 வெள்ளி முறையாக மேம்பாட்டு நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் இதுநாள் வரை வீடுகளை கட்ட தொடங்காமல் காலம் தாமதித்து வருகின்றது. இது குறித்து பல பேச்சுவார்த்தைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் சற்று பொறு மைக் காக்க வேண்டும். திட்டமிட்டப்படி அவ்வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முறையாக ஒப்படைக்கப்படும். எனது வாக்குறுதியை நம்பும் மக்கள் அமைதியாக இருக்கலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களின் பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம். அப் பணத்தை பெற 2 மாதங்கள் ஆகும் என்று மாறன் மக்கள் மத்தியில் அறிவித்தார். மாறனின் அறிவிப்பை கேட்டு திரண்டிருந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் கோபத்தில் கொதித்தனர். வீடுகள் கட்டித் தரப்படும் என நம்பி இனியும் எங்களால் ஏமாற முடியாது. நாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும். அது வும் இன்றே ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர். உடனடியாக பணம் செலுத்த முடியாது. சற்று கால அவகாசம் வேண்டும் என மாறன் கேட்டுக் கொண்டார். அவரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத மக்கள் பணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு ஏமாற்று வேலையும் இருக்கக் கூடாது என பலத்த சலசலப்புகளுக்கு மத்தியில் மக்கள் எச்சரித்தனர். இறுதியில் பணம் செலுத்திய அனைத்து மக்களின் ரசீதுகளின் மாதிரியை மாறன் தலைமையிலான குழுவினர் பெற்றுக் கொண்டதுடன் பணம் முறையாக ஒப்படைக்கப்படும் என கூறினர். பாதிக்கப்பட்ட எங்களுக்கு முறையாக பணம் செலுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று கூறிய மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்