பத்து கேவ்ஸ் சிவானந்தா ஆசிரம பாலர் பள்ளியின் 22 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிவானந்தா ஆசிரம வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய விளையாட்டுப் போட்டி தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொடங்கியது. பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்தி போட்டி நடத்தினர். போட்டியில் மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பங்கேற்றனர். பெற்றோர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. பெற்றோர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்ட இப்போட்டியில் பத்து மலை தம்பதிகள் சென்ற ஆண்டைப் போல இவ்வாண்டும் மாண வர்களுக்கு பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரம பொறுப்பாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்