வேலை வாய்ப்புகளை பொறுத்தவரையில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு முதலாளிமார்களை வலியுறுத்தினார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக். தொழிலாளர் உருமாற்றத் திட்டத்தில் அரசு தனது இலக்கினை நிறைவேற்றுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். மாபெரும் வேலை கண்காட்சி ஒன்றை அரசு ஏற்பாடு செய்யும். இம்மாதம் 20ஆம் தேதி இக்கண்காட்சி 11 புறநகர் உருமாற்று மையங்களில் தொடங் கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். முடிந்தால் மலேசிய தொழிலாளர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். அந்நியர்களுக்கே வாய்ப்புகள் வழங்கி கொண்டிருக்க வேண்டாம். உள்ளூர் வாசிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாற்று திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நடவடிக்கை குறித் தும் பிரதமர் பேசினார். இவர்களுக்கான ஒரு திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார். உருமாற்றுத் திட்டத்தின் கீழ் இத்தகைய செயல்பாடானது மாற்று திறனாளிகளின் திறனாற்றலை மேம்படுத்த உதவும். அரிப் கஸ்தூரி என்ற வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவர் மாற்று திறனாளி நூரஸிஸா முகமட் ஸம்ரி என்பவர். இவரின் வெற்றிக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்