மாணவர்களிடையே நிலவும் குற்றச்செயல்களை தடுக்க அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பத்து பகாட் மாவட்ட போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார். யொங் பெங் தமிழ்ப்பள்ளியில் பத்து பகாட் மாவட்ட போலீசின் குற்றவியல் விசார ணைப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு எதிராக போராடுவோம் எனும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய விக் னேஸ்வரி மாணவர்களிடையே கட்டொழுங்கு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். இறை நம்பிக்கையை இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு ஏற்படுத்துவதன் மூலம் நம்பிக்கையையும் வேரூன்றச் செய்ய முடியும் என்ற அவர் மாண வர்களும் தங்களுடைய பள்ளி வாழ்க்கையில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக பள் ளியின் தலைமையாசிரியர் டோமினிக் சவரிமுத்து இந்நிகழ்வை தொடக்கி வைத்து உரையைற்றிய வேளையில் யொங் பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க தங்களின் கட்டொழுங்கு முறையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நிகழ்வை ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டார். அண்மைக்காலமாக இடைநிலைப்பள்ளிகளில் காணப்படும் குண்டர் தன நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிய அவர் அதனால் ஏற்படும் பாதிப்புகளை முன் கூட்டியே உணர்ந்து கொள்ள இந்நிகழ்வு பேருதவியாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணி யரசு ராமன் கருத்தரங்கை முடித்து வைத்த வேளையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்