உள்ளூர் இசைத்துறையில் மின்னும் நட்சத்திரங்களாக வலம் வந்த பலர் கஷ்டப்பட்டு தங்கள் படைப்புகளை கேஸட்டுகளாக வெளியீடு செய்து வந்தது ஒரு காலம். அப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் கேஸட் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால், மனிதர்களின் வாழ்வில் என்று சமூக வலைத்தளம் ஒரு முக்கிய மான அம்சமாக மாறத்தொடங்கியதோ அன்றே அபரிமித மாற்றங்களும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியது. இன்றையச் செய்தி நாளை தெரியும் நிலை மாறி, உடனுக்குடன் சூடான தகவல் நம்மை வந்து சேருகின்றது. இசைக்கலைஞர்களுக்கும் கைகொடுக்கும் ஒரு தலைசிறந்த யுக்தியாகவும் சமூக வலைத்தளம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. உள்ளூர் கலைஞர்கள் முன்பு போல கையில் படைப்பை வைத்துக்கொண்டு அதை வெளியிடுவதற்காக ஒருவரின் கையை எதிர்பார்த்த காலம் மாறி விட்டது. இப்போதெல்லாம் பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து, பாடலை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதன் வழி உள்ளூர் கலைஞர்கள் பலர் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்கின்றனர். அங்கிருந்து உள்ளூர் வானொலி நிலையங் களான மின்னல் எஃப்.எம்., டி.எச்.ஆர். ராகா வழியாக ரசிகர்கள் அதனை கேட்டு மகிழ்கின்றனர். அந்த வகையில் பிரபலமான ஒரு பாடல்தான் ‘மழை’. இந்த பாடலின் இசைக் கலைஞர், பாடகர், தயாரிப்பாளர் என்ற மூன்று பாகங்களை ஏற்றுள்ளார் 36 வயது கலைஞர் சுரேந்திரன் கிருஷ்ணன். ‘பெண்ணே நீ என்ன சிலைதானோ...நீயும் சிரித்தாலே தோன்றும் பிறைதானோ’ என்று பெண்ணை அழகாக வர்ணிக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் ஒரு பல்கலைக்கழக மாணவரான மகேந்திரா கணேசன், ஹம்மிங் குரல் கொடுத்துள்ளார் பவானி செல்வம், இசை ஷேன் எக்ஸ்ட்ரீம், வீடியோ தயாரிப்பு வினோதரன் ரவிச்சந்தர், நிர்வாகி சத்யா தர்மலிங்கம் என அனைவரும் இளம் தலைமுறையினரே இந்த ‘மழை’ - யின் தயாரிப்பிற்கு பின்னணியில் உள்ளவர்கள். பாடலை வழங்கியிருக்கும் சுரேந்திரன் கிருஷ்ணன் உள்ளூர் இசை உலகிற்கு புதியவர் அல்ல. 1960-களில் பிரபலமான கலப்படம் நிகழ்ச்சியின் வழி மேடைகள் தோறும் பாடல்களை வழங்கி வந்துள்ள, பேரா பத்து காஜாவை சேர்ந்த பாடகி அமுதா கிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன்தான் இந்த சுரேந் திரன். தனது ஏழாவது வயதிலேயே தன் தாயோடு மேடை ஏறி பல பாடல்களை பாடி கைத்தட்டல் பெற்றவர். சுரேன் என்று அப்போதே உள்ளூர் இசைத் துறை யில் பிரபலம் அடைந்தவர். இசைத்துறையில் தனது அனுபவங் களை மலேசிய நண்பனிடம் இவ்வாறு விவரித்தார்: நான் முதல் முறையாக மேடை ஏறியது 7 வயதில். ஒரு பாடகராக வேண்டும் என்ற ஆவல் என்னுள் எப்போதுமே இருந்து வந்துள்ளது. சரி யான நேரம், எனது திறமையை வெளிக்கொணரும் சரியான தருணம், என் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஆதரவு எனக்கு வழிகாட்டி யாக அமைந்தது. குறிப்பாக என் அம்மாதான் எனக்கு உறுது ணையாக இருந்தார். மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாட நான் கேட்கும் அந்த நாட்கள் எல்லாம், நானும் ஒரு நாள் மேடை ஏற வேண் டும், பாடகனாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. இசைக் குழுவோடு அவர் பாடல் ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது நானும் சேர்ந்து பாடுவேன். அப்போதுதான் எனது 7-ஆவது வயதில் என் தாயு டன் காக்கிச் சட்டை போட்ட மச்சான் என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தொடர்ந்து பல மேடைகளில் நான் அவருடன் பாடியி ருக்கிறேன். இவை எல்லாம் எனக்கு சிறந்த அனுபவமாக விளங்கியது. இடையே வேலை, குடும்பம் என்று வந்ததும் சிறிது காலம் ஒதுங்கியிருந்தேன். என் திருமண நாளில் என் மனைவிக்காக நான் பாடிய ‘என்னவளே அடி என்ன வளே..’என்ற பாடல் பலரின் பாராட்டை பெற்றது என்று பெருமிதத்துடன் கூறினார் சுரேன். அதன் பிறகு, நானே சொந்தமாக ஒரு பாடலை பாடி அதை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததால், அதன் வழி மலர்ந்ததுதான் மழை. என் நண்பர்களும், குடும்பத்தினரும் பல வழிகளில் இதற்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர். பல நாட்கள், வேலை முடிந்து பல இரவுகள் இந்த பாடலை தயாரிப்ப தற்காக நாங்கள் ஒன்று கூடி, அதிகாலை வரை பாடுபட்டிருக் கிறோம் என்று சுரேன் மேலும் கூறினார். இவரின் இரண்டாவது பாடல் தற்போது தயாரிப்பில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு டிஎச்ஆர் வழி மிகவும் பிரபலம் அடைந்த ஒரு காதல் கதையின் பாடகர் சத்யா தர்மலிங்கம், இசையமைப்பாளர் தீபன் ஆகி யோரு டன் இணைந்து இதற்கான தயாரிப்புப் பணிகளை இவர் கவனித்து வருகிறார். இந்தியாவிலிருந்து இசையை இறக்கு மதி செய்யும் திட்டமும் உள்ளதாக கூறுகிறார். மின்னல் எஃப்.எம் வானொலியின் உள்ளூர் கலைஞர்கள் பாடல் வரிசை யில் மழை பாடலும் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்