பொதுச்சேவை இலாகா (ஜே.பி.ஏ) உபகாரச் சம்பளத்தில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் எவரேனும் அரசாங்கத்தை குறைகூறுவது கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களின் அந்த சலுகை பறிக்கப்படும் என்று ஜே.பி.ஏ தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஜைனால் ரஹிம் சிமான் (படம்) எச்சரித்துள்ளார். முகநூல், அகப்பக்கம் போன்ற சமூக வலைத்தளங்களில் நாட்டின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அம்மாணவர்கள் கருத்துப் பதிவேற்றம் செய்வது கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களுக்கான உபகாரச் சம்பளத்தை வாபஸ் பெறுவதுதான் நியாயமான நடவடிக்கை என்று அவர் கருத்து ரைத்தார். சீன நாளிதழ் ஒன்றுடனான பேட்டியில் அவர் அவ்வாறு கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தலைசிறந்த மாணவர்கள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் வழங்கப்படு கிறது. தவிர, அரசாங்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்காக அல்ல. எதிர்காலத்தில் அவர்கள் கல்விகற்ற நிபுணர்களாக வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்