img
img

தமிழ்ப்பள்ளிகளில் இரட்டை மொழித் திட்டம்!
திங்கள் 01 மே 2017 19:03:42

img

நாட்டில் தற்போது நிலைத் திருக்கும் 524 தமிழ்ப்பள்ளிகளுக்குக் காரணகர்த்தாக்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளி களுக்கு அனுப்பி வைத்திருக்கும் பெற் றோர்களே என்பதை யாருமே மறந்துவிட வேண் டாம். தேசியப் பள்ளிகளிலும் சீனப்பள்ளிகளிலும் ஆரம்பக் கல்வியைத் தொடரும் சுமார் 51 விழுக்காடு இந்திய மாணவர் களின் தேர்வினைக் கேள்வி கேட்காத அரசு சாரா இயக்கங் களும் கல்வி கற்ற முனை வர்களும் தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவதன் நோக்கத்தினை ஏவுகணை அறிய விரும்புகின்றது. 2017ஆம் ஆண்டு முதல் 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல் படுத்தப்பட்டிருக்கும் இரட்டை மொழித் திட்டத்தின் வழி (Dual Language Programme - DLP) அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கில மொழி யில் போதிக்கப்படுவதற்கு எதிராக நேரடியாகவே உண் மையற்ற தகவல்களையும் அடிப்படையற்ற அனுமானங்க ளையும், கல்வி அமைச்சுக்கு எதிரான பிரச்சாரங்களையும் அரசியல் நோக்கத்திற்காகவும் சுயநலத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் செய்து வரும் தரப்பினரின் செயல் களை பெற்றோர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண் டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது! மாணவர் எண்ணிக்கையில் சரிவு 2003ஆம் ஆண்டில் துன் டாக்டர் மகாதீர் முகமதுவால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு சேரா அமலாக்கம் கண்ட அறிவியலும், கணிதமும் ஆங் கிலத்தில் போதிக்கும் நடை முறையால் தமிழ்ப்பள்ளி களுக்கு புதிய விடியல் ஏற்பட் டதை ஏற்கெனவே ஏவுகணை விவரித்துள்ளது! 2009ஆம் ஆண்டு வரை அமலாக்கத்திலிருந்து (PPSMI) அமலாக்கம் தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய 20,000 மாணவர் களின் எண்ணிக்கையை கூட்டி யதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டியதில்லை! மாறாக மலேசிய கல்வியமைச்சு 2010ஆம் ஆண்டு முதல் மீண்டும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை தாய்மொழியான தமிழ்மொழியிலேயே போதிக்கப் பட வேண்டும் என்ற நடை முறையை அமல்படுத்தியது! பிள்ளையின் ஆரம்பக் கல் வியை தேர்ந்தெடுப்பதற்கு பெற் றோர்கள் பல்வேறு விவகாரங்க ளுக்கு முன்னுரிமை வழங்குகின் றனர். * தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்த வர்கள்! * பள்ளியின் தொடர் கல் விக்கு முன்னுரிமை வழங்குப வர்கள்! * பள்ளியின் கல்வி பயிலும் சூழல் மற்றும் அடிப்படை வச திகள்! * பள்ளியின் இட அமைப்பின் போக்குவரத்து வசதிகள் போன்ற வற்றினை ஆய்வு செய்தாலும் 51 விழுக்காட்டு இந்திய மாண வர்கள் தமிழ்ப்பள்ளிகளை தவிர்த்து பிற பள்ளிகளில் பயில் வதற்கு தொடர் கல்வியின் (இடைநிலைப்பள்ளி அடுத்து பல்கலைக்கழகக் கல்வி) முக்கியத்துவம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? 2010ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் கண்ட கே.எஸ். எஸ்.ஆர். (KSSR) திட்ட அம லாக் கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிர் மறையான தாக்கத்தினை மாண வர்களின் எண்ணிக்கையை ஏற்படுத்தியதை நிதானமாகவும் சரியான மன நிலையோடும் இரட்டை மொழி திட்டத்தினை எதிர்ப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என ஏவுகணை நினைவுறுத்துகின்றது! 2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய 25,699 இந்திய மாணவர் களைத் தமிழ்ப்பள்ளிகள் இழந்துள்ளதற்கான சரியான காரணம் ஆரம்பப் பள்ளிகளுக்கும் இடைநிலைப்பள்ளிகளுக்கும் உள்ள தொடர் கல்வியே என்பதை யாருமே மறுக்க முடியாது. 25,699 மாணவர்கள் பிறபள்ளிகளில் பயிலச் சென்றதால் தமிழ்ப்பள்ளிகளில் ஏறக்குறைய 900 இந்திய ஆசிரியர்களின் வேலைக்கு உலை வைக்கப் பட்டிருப்பதற்கும் அடிப்படைக் காரணம் அறியாமல் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தவல்ல டிஎல்பிக்கு எதிராகக் குரல் எழுப் புவதைப் பெற்றோர்கள் உனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். ஐந்தாண்டுகளில் 26,000 மாணவர்களை இழந்திருக்கும் தமிழ்ப்பள்ளிகள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 20,000 மாண்வர்கள் இழந்தால் (அனுமானம் அல்ல நிஜம்) எத்தனைத் தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டி வரும் எத்தனை இந்திய ஆசிரியர்களில் வேலை இழப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப் படாமல் இரட்டை மொழித் திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டுவதற்கான முயற்சியாகவே ஏவுகணை கருதுகின்றது. கல்வியமைச்சு பின் வாங்கலாமா? மலேசியக் கல்வியமைச்சு 2016 ஆம் ஆண்டில் அமலாக்கம் செய்திருக்கும் இரட்டை மொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் முழுமையாக அமல் படுத்துவதற்கு ஏற்ற வகையில் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. டிஎல்பியை அமலாக்கப்படுத்துவதற்கும், மேம்பாட்டினை உறுதி படுத்துவதற்கும் முழுமையான பொறுப்பினைக் கொண்டிருக்கும் பாடு (PADU Education Performance and Delivary Unit) எனப்படும் கல்வி அடைவு, செயலாக்க மேதிறன் பகுதி. எக்காரணத்தைக் கொண்டும் யாருடைய மிரட்டலுக்குப் பயந்தும் தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் கண்டிருக்கும் டிஎல்பி திட்டத்தினை மீட்டுக் கொள்ள வேண்டாம் எனப் பெற்றோர்களின் சார்பில் ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. 23.2.2017 ஆம் நாள் தேதியிடப்பட்ட மலேசியக் கல்வியமைச்சின் துணைக் கல்வி இயக்குநர் டத்தோஸ்ரீ ஹைரில் பின் அவாங் (Dato Seri Khairil Bin Awang, Timbalan Ketua Pengarah) தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும் டிஎல்பி சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு 47 தமிழ்ப்பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியிருக்கும் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பின் கருத்திற்கு விளக்கம் தருவதற்கான முயற்சியை மலேசியக் கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. டிஎல்பி விவகாரத்தில் மலேசியக் கல்வியமைச்சின் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரம் கிடைக்குமா? என ஏவுகணை கேட்கின்றது. உலக மக்கள் அனைவரிடமும் இல்லாத சிறப்பினைப் பெற்றிருக்கும் இந்தியர்கள் தங்களுக் குத் தானே எதிர்ப்புத்தன்மை யையும் கல்வி விவகாரத்தில் செய்ய வேண்டாம் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி கல்வித் திட்டம் ஓடுகின்ற ஓணானை சட்டைக்குள் விட்ட கதையல்ல மாறாக வருகின்ற மகாலெட்சுமியை எட்டி உதைக் கும் கதை என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. டிஎல்பி விவகாரத்தினை சரியான பாதைக்கு இட்டுச் செல்வதற்கான பொதுக்குழு ஒன்று அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையினை ஏவுகணை முன் வைக்கின்றது. தமிழ்ப்பள்ளிகளில் டிஎல் பிக்கு எதிராக செயல்படும் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரின் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் முறியடிக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது கல்வி தொடர்பால விவகாரத்தில் பெற்றோர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண் டும். டிஎல்பி திட்டம் தொடர்பாக முழுமையான விவரங்களைப் பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகளை நாம் இழக்க வேண்டுமானால் டிஎல்பி நடைமுறையை எதிர்த் தாலே போதும். இதைத்தானே அரசு சாரா இயக்கங்கள் விரும்புகின்றன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img