img
img

திவாலாகும் அபாயத்தில் 49,000 அரசு ஊழியர்கள்.
திங்கள் 01 மே 2017 11:53:14

img

கடன் தொல்லை காரணமாக அரசு துறைகளைச் சேர்ந்த 49,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திவாலாகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று பொதுச் சேவை துறை ஊழியர் தொழிற்சங்கமான கியூ பெக்ஸ் எச்சரித்துள்ளது. நிதிக்கழகங்களில் தனிப்பட்ட கடன்களுக்காக அவர்கள் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். ஆனால், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடுகின்றனர் என்று கியூபெக்ஸ் தலைவர் அஜி மூடா தெரிவித்தார். கடனுக்கு விண்ணப்பம் செய்யும்போது சில அரசு ஊழியர்கள் போலி சம்பள ஆவணங்களை தயார் செய்து கொடுத்திருப்பதால் நிலைமை உண்மையில் கடுமையாக உள்ளது என்று அவர் சொன்னார். நேற்று இங்கு நடைபெற்ற தொழிலாளர் தின கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். அரசு ஊழியர்கள் கடனுதவிக்காக விண்ணப்பம் செய்யும்போது அவர்களின் விண்ணப்பங்களை கண்காணிக்க ஒரு முறை கிடையாது. அதனால்தான் தங் கள் சக்திக்கு மீறிய தொகையைப் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஒன்றை செலுத்தி முடிக்கா மல் பல தடவை கடனுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். அரசாங்கம் தற்போது கடன் வழங்கும் நோக்கத்திற்காக 20 நிதிக்கழகங்களை அங்கீகரித்துள்ளது. அவை ஒன்றுக்கொன்று கலந்து பேசாமலேயே கடன் விண்ணப்பம் செய்திருக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வகை செய்கிறது. தங்கள் சம்பள ஆவணத்தை மட்டுமே கொண்டு அவர் கள் கடனுக்கு விண்ணப்பம் செய்யலாம். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளத்திலிருந்து அது பிடித்தம் செய்யப்படும். ஒரு சில ஊழியர் கள் இரண்டு மூன்று நிதிக் கழகங்களில் விண்ணப்பம் செய்து கடன் பெற்றுள்ளனர் என்று அஜி விளக்கம் அளித்தார். ஆகவே, அரசு ஊழியர்களின் தரவு அடிப்படையில் அவர்களின் கடன் நிலவரத்தை கண்காணிக்கும் முறையை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று கியூபெக்ஸ் பரிந்துரைப்பதாக அவர் சொன்னார். தற்போது சுமார் 3,000 அரசு ஊழியர்கள் திவாலாகியுள்ளனர். பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆர் மேலும் எச்சரித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img