(பட்டர்வொர்த்) தனது தோழியின் தூண்டுதலின் பேரில் வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்தில் சேர்க்கப்பட்ட தெய்வானை மூர்த்தி (27) இப்போது அம்மதத்திலிருந்து வெளியேற மலேசிய இந்து சங்கத்தின் உதவியை நாடியுள்ளார். சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது, தோழி ஒருவர் வற்புறுத்தியதால் அவருடன் தங்கியிருந்ததாகவும் அந்த சமயத்தில் பல வகையில் தாம் துன்புறுத்தபட்டதாகவும் தெய்வானை கூறினார். மேலும் அவர் விவரிக்கையில், என் தோழி போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவள். இஸ்லாம் மதத்தில் நான் சேர வேண்டும் என்று அடிக்கடி என்னை தொல்லைப்படுத்தி வந்தாள். அப்படி சேரவில்லை என்றால் என் தந்தைக்கு தீங்கு விளைவிக்கப்போவதாக என்னை மிரட்டினாள். அவளின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு நான் அவளின் வார்த்தைக்கு இணங்கி இஸ்லாத்தில் சேர்ந்தேன். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை பதிவு இலாகாவில் அடையாள அட்டையை எடுக்க சென்ற பொது அதில் எனக்கு இஸ்லாமிய பெயர் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். பட்டர்வொர்த், தெலுக் ஆயர் தாவாரில் தனது தந்தையுடன் தெய்வானை தற்போது வசித்து வருகிறார். தாம் கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில் சேர்க் கப்பட்டதாக போலீசில் புகார் செய்தபோது இஸ்லாமிய சமய இலாகாவில் இது பற்றி ஆலோசனை பெறும்படி காவல் துறையினர் கூறிவிட்டதாக தெய் வானை மேலும் கூறினார். ஓர் இந்துவாகவே வாழ விரும்பும் இவர் இவ்விவகாரம் தொடர்பில் இந்து சங்கத்தின் உதவியை நாடியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்