மலேசிய ஓவிய வானில் எத்தனையோ ஒளிரும் நட்சத்திரங்களை நாம் பார்த்து ரசித்துள்ளோம் ஓவியர் கிருஷ்ணா, சந்திரன். லெனா. ராதா, முகில், சந்துரு, இளங்கோ, வேலவன் போன்றோர் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்கள். தூரிகையால் மாயம் செய்து மனங்களை மயங்க வைத்தவர்கள். அந்த வரிசையில் இடம் பிடிக்கும் ஆர் வத்தோடு முனைப் புக் காட்டி வருகிறார் சிலாங்கூர், செமினி, பண்டார் ரிஞ்சிங் இடைநிலைப்பள்ளியின் ஐந்தாம் படிவ மாணவர் விஜய். விஜய்க்குச் சிறு வயது முதலே இத்துறையில் ஆர்வம் துளிர்க்க ஆரம்பித்தது. ஆறு வயதில் படங்களை அச்சு எடுத்து வரையத் தொடங்கிய பின்னர் மனித முகங்களை ஓவியமாக வரைந்தார். 12 வயதில் மனிதரின் முகங்களைத் தத்ரூபமாக வரையும் ஆற்றலைப் பெற்றார். 2013ஆம் ஆண்டில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு புத்ரா ஜெயா வில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முதல் நாள் தான் இந்தத் தகவல் விஜய் காதுக்கு எட்டியது. அந்த நாள் முழுவதும் தூங்காமல் விடிய விடிய பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்து காலையில் புத்ரா ஜெயாவில் பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்து காலையில் புத்ரா ஜெயாவில் பிரதமரின் இல்லத்துக்கு எடுத்துச் சென்றார். ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்த பிரதமர் அப்படத்தில் தம் கையொப்பமிட்டதோடு விஜய்யின் ஆற்றலைப் பாராட்டியதை இன்றுவரை இவரால் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. தாம் ஓவியத் துறையில் சிறந்து விளங்க முக்கியக் காரணமாக இருந்து ஊக்கமும் உற்சாகமும் வழங்கிவரும் தம் பெற்றோரையும் உடன்பிறப்புகளை யும் நன்றியோடு நினைவுகூரும் விஜய், எதிர்காலத் திட்டங்களையும் பற்றி மனம் திறந்தார். எதிர்காலத்தில் கட்டட வடிவமைப்பாளராக வர விரும் புகிறேன். அதோடு, ‘Vijay Arts’ என்ற பெயரில் ‘Art studio’ திறக்க விரும்புகிறேன். அதற்கு முன்பாக, இந்த ஓவியத் துறையில் என் திறமையை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார். தமிழ்ப்பள்ளி மாணவரான விஜய் கல்வியிலும் சிறந்து விளங்குகிறார். தன்னடக்கமும் பணிவும் கொண்டவராகத் திகழும் விஜய் ஓவியக் கலையில் சிறந்து விளங்க நாமும் வாழ்த்துவோம்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்