கால்பந்து விளையாட்டிலும் அரசியலை நுழைத்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் அராஜகம் புரிந்து வருவதாக எப்ஏஎஸ் சின் தலைவர் டத்தோஸ்ரீ சுப ஹான் கமால் நேற்று குற்றம் சாட்டினார். ஷாஆலம் செக்ஷன் யு 15ல் எப்ஏஎஸ் எனப்படும் சிலாங்கூர் கால்பந்து சங்கத்திற்கு என விளையாட்டு அரங்கம் ஒன்று கட்டப்பட்டது. மாநிலத்தில் அதிகமான கால்பந்து விளையாட்டாளர் களை உருவாக்க வேண் டும் என்ற நோக்கில் இந்த அரங் கம் 1 கோடியே 20 லட்சம் வெள்ளி செல வில் கட்டப் பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்த போது இவ்வரங்கத்தை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெட்டாலிங்ஜெயாவில் இருந்த எப்ஏஎஸ்க்கு சொந்தமான திடலில் மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால், ஷாஆலமில் மாற்று அரங்கத்தை கட்ட டான்ஸ்ரீ காலிட் முடிவு செய்தார்.இதன் அடிப்படையில் அவ்விளையாட்டு அரங்கம் கடந்தாண்டு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமைப் பெற்ற பின்பு அவ்விளையாட்டு அரங்கை எப்ஏஎஸ்சிடம் ஒப்படைக்க சிலாங்கூர் மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மாநில மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சங்கத்தின் தலைவராக இருந்த போது, இவ்விவகாரத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட வில்லை. அஸ்மின் அலியின் திட்டங்களுக்கு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆதரவு வழங்காத நிலையில் அவர் சங்கத்தை விட்டு விலகிச் சென்றார்.அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் நான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். என் தலைமையிலான அணி எப்ஏஎஸ்சிற்கு பொறுப்பேற்றது கூட அவ்விளையாட்டு அரங்கை ஒப்படைப்பதற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என தாம் நம்புவதாக சுபஹான் கமால் கூறினார்.81 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட கால்பந்து சங்கத்திற்கு சொந்த விளையாட்டு அரங்கம் இல்லாதது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும். அவ்விளையாட்டு அரங்கை எப்ஏஎஸ்சில் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில அரசுக்கு கடிதங்களும் வழங்கப்பட்டன. ஆனால் அக் கடிதங்களுக்கு எந்தவொரு பதிலும் இல்லை. ஆகவேஅவ்விளையாட்டு அரங்கை உடனடியாக எப்ஏஎஸ்சிடம் ஒப்படைக்க மாநில அரசு முன்வர வேண் டும் என்று சுபஹான் கமால் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்