பழக்கடை உரிமை யாளர்களின் கண்ணில் படாமல் அக்கடையினுள் நுழைந்த ராஜநாகத்தினால் பாதிக்கப்படாமல் குரைத்தது மூலம் நாய் அவர்களை காப்பாற்றியுள்ளது. சிலாங்கூர், பத்து ஆராங் கம்போங் மிலாயு வில் 50ஆம் வயது களிலுள்ள அத்தம்பதிக் குச் சொந்தமான பழக் கடை உள்ளது. வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் அந்த ராஜநாகம் அக் கடையினுள் நுழைந்திருக் கலாம் என கணிக்கப் படுகிறது.அன்று இரவு 7 மணி யளவில் பார் வைக்காக பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி அவர்களின் நாய் இடைவிடாமல் குரைத்திருக்கிறது. அதையடுத்து அவர்கள் மேற் கொண்ட ஆய்வில் அங்கு ராஜநாகம் இருப்பதை அத்தம்பதியர் கண்டு அதிர்ச்சி யடைந்துள்ளனர். அவசர அழைப்பை அடுத்து மூன்று நிமிடங்களில் அக்கடை யிடத்திற்கு தீயணைப்பு மீட்புத் துறையினர் விரைந்தனர். அந்த ராஜ நாகத்தை பத்து ஆராங் காப்புக் காட்டில் விடும் வகையில் மீட்புத் துறை பணியாளர்கள் அதைபிடித்துச் சென்றனர் என பத்து ஆராங் தீயணைப்பு மீட்புத் துறையின் தலைவர் யாஸ்லி யாஹ்யா கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்