வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகில் நேற்று காலை சிரம்பான் நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரு ஆடவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றனர். மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி செர்டாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிலோ மீட்டர் 303.9 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் 35 வயதுடைய மதன் த/பெ மாதவன் என்பவரும் 28 வயதுடைய இந்திய முஸ்லிம் நபரான அப்துல் ரசாலி என்ற ஆட வரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். இதில் மதன் காரை செலுத்த அப்துல் ரசாலி பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த கர்னேஸ் த/பெ சங்கரன் பலத்த காயங் களுக்கு உள்ளாகியிருப்பதாக காஜாங் காவல் துறை தலைவர் ஏசிபி ஒஸ்மான் நன்யான் கூறினார். இவர்களது மாதிரி ரத்தம் சோதனைக்கு அனுப் பப்பட் டுள்ளதாகவும் இறந்து போன இருவரது உடல்களும் செர்டாங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏசிபி ஒஸ் மான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்