img
img

பிரதமர் நஜீப் அரசு ஊழியர் இல்லையா?
ஞாயிறு 30 ஏப்ரல் 2017 10:40:08

img

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், ஓர் அரசாங்க ஊழியர் அல்லர் என்று கூறி, அவருக்கு எதிராக துன் மகாதீர் தொடுத்த வழக்கை ரத்து செய்து இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு தவறான முடிவாகும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியும் சட்ட வல்லுநருமான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் நேற்று கடிந்து கொண்டார். பிரதமர் நஜீப் ஓர் அரசாங்க ஊழியர், அவர் பணியாற்றும் பணிமனை ஓர் அரசாங்க அலுவலகமாகும் என்ற நிலையில் ஓர் அரசாங்க ஊழியர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் மேலும் இருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளனர் என்று கடந்த 15 ஆண்டு காலமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவருமான கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார். இது நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது அல்ல. இது ஏதோ ஒரு நடவடிக்கைக்குரிய ஒன்றும் அல்ல. ஆனால், அரசமைப்பு உரிமையி னால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிர்வாகத்தின் உயர் பதவி வகிக்கின்றவரால் செய்யப்பட்ட அதிகார மீறலாகும் என்று கோபால் ஸ்ரீ ராம் குறிப்பிட்டார். பொதுச் சேவை அலுவலகத்தில் நடைபெறக்கூடிய அதிகார துஷ்பிரயோகமானது, அந்த அதிகார துஷ்பிரயோகத்தை செய்தவர் அரசாங்க ஊழியரா? இல் லையா? என்பது குறித்து அடையாளம் காட்டுவதற்கு கூட்டரசு அரசமைப்பு சட்டத்தையோ அல்லது பொருள் விளக்கும் சட்டத்தையோ பயன்படுத்துவது தேவையில்லாததாகும் என்றார் கோபால் ஸ்ரீ ராம். எனவே டத்தோ ஸ்ரீ நஜீப்பிற்கு எதிராக துன் மகாதீரும் இதர இரண்டு தரப்பினரும் தொடுத்துள்ள வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அடிப்படையிலேயே தவ றாகும். நீதிபதி உண்மையிலே தவறு செய்துள்ளார் என்று கோபால் ஸ்ரீ ராம் விளக்கினார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அரசுப் பணியில் சட்டப்பூர்வமான செயலை தவறாக செய்ததாக (common law tort of misfeasance in public office ) அவருக்கு எதி ராக துன் மகாதீரும் இதர இரண்டு தரப்பினரும் தொடர்ந்திருந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. நஜீப் , பிரதமர் என்ற முறையில் ஓர் அரசு ஊழியர் அல்ல. ஆகவே அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு காரணம் இல்லை என்று நீதிபதி அபு பாக்கார் தீர்ப் பளித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அபு பாக்கார் வாதிகளான துன் மகாதீர் மற்றும் இதர இரண்டு தரப்பினரான டத்தோ கைருடீன் அபு ஹசான் மற்றும் அனினா ஷாடுடின் ஆகிய மூவரும் செலவுத் தொகையாக 30,000 வெள்ளி கட்டும்படி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அம்மூவரும் பிரதமர் நஜீப்பிற்கு எதிராக 264 கோடியே 20 லட்சம் வெள்ளியைக் கோரும் வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தனர். மலேசிய அரசமைப்புச் சட்டம் மற்றும் பொருள் விளக்குதல் சட்டம் 1948 மற்றும் 1967 ஆகியவற்றின் கீழ் பிரதமர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் செயலாளர்கள் பொதுப்பணியாளர்கள் அல்ல. அவர்கள் ஒரு நிர்வாகத்தின் உறுப்பினர்கள் என்று கூறுகின்றன. அவற்றின் அடிப் படையில் நீதிபதி அபு பாக்கார் தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். இத்தீர்ப்பு பற்றி கருத்துரைத்த வாதிகளில் ஒருவரான கைருடின் மேல்முறையீடு, தேவைப்பட்டால் கூட்டரசு நீதிமன்றம் வரையில் செய்யப்படும் என்று கூறினார். இது தொடர்பாக கருத்துரைத்த பிரபல வழக்கறிஞரான கோபால் ஸ்ரீ ராம், உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பின் நகலை பார்த்தபின்னர் அந்தத் தீர்ப்பு தவறானது என்ற முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார். உண்மையிலே யார் அரசாங்க அதிகாரி அல்லது அரசாங்க ஊழியர் என்பதை நிர்ணயிப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அபு பாக்கார் மலேசிய அரசமைப்புச் சட்டம் மற்றும் பொருள் விளக்குதல் சட்டம் 1948 மற்றும் 1967 ஆகியவற்றை ஓர் அளவுகோலாக பயன்படுத்தியிருக்கக்கூடாது என்றார். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு ஏற்ப அரசாங்கத்தை வழி நடத்தக் கூடிய ஒவ்வொரு அமைச்சரும் அரசாங் கத்தின் நம்பிக்கைக்குரியவர்கள். அவர்களே அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் என்று கோபால் ஸ்ரீ ராம் விளக்கம் அளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img