முழுக் கருங்கல் சிற்ப சாஸ்திர முறையில் மகா கும்பாபிஷேகம் காணும் கிள்ளான் சுந்தரராஜப் பெருமாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நாளை 30-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை போர்ட் கிள்ளான்- கிள்ளான் செல்லும் பிரதான போக்குவரத்துச் சாலையான பெர்சியாரான் ராஜா மூடா மூசா சாலை மேற்படி போக்கு வரத் துக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று ஆலய நிர்வாகத் தினர் தெரி வித்தனர். அதிகாலை 4.00 மணியி லிருந்து திரளான பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் அதிகரிக் கக்கூடும் என்பதால், வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக் கும் வகையில் கிள்ளான் சாலைப் போக்குவரத்துத்துறை இத்திட்டத்தை அமல்படுத்தவுள் ளதாகத் தெரிவிக்கப் பட்டது. இதன் தொடர்பில், போர்ட் கிள்ளானிலிருந்து வரும் வாகனங் கள் முன்னதாக தாமான் கெம்பீரா சாலை வழியாக அல்லது தெலுக் பூலாய், சிலியோங் சாலைகளைப் பயன்படுத்தி கிள்ளான் நகருக்கும் கோலாலம் பூருக்கும் செல்லும் வகையில் சாலைப் போக்குவரத் துப் போலீஸ் அதிகாரிகள் மாற்று வழி தொடர்பான பணியில் ஈடுபடுவர் என்று ஆலயத் தலை வர் சித.ஆனந்தகிருஷ் ணன் குறிப்பிட்டார். மேலும், அன்றைய தினம் பக்தகோடிகளுக்கும் பொது மக்களுக்கும் இலவசப் பேருந்துப் போக்குவரத்துச் சேவையை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய் துள்ளதாகக் கூறிய அவர், கிள்ளான் கேடிஎம் ரயில் நிலையம், பண்டமாரான் விளையாட்டரங்கம், செட்டி பாடாங், சௌதர்ன் பார்க், லா சால் பள்ளிக் கூடம், எம்ஜிஎஸ் பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளி லிருந்து ஆலயத்திற்கு வருவதற்கு இலவசப் பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் தங்களின் வாகனத்தை அப்பகுதிகளில் நிறுத்தி வைத்து விட்டு மேற்படி இலவசப் பேருந்தின் மூலம் ஆலயத்திற்கு வந்தடையலாம் என்று சுட்டிக் காட்டிய அவர், இதன் மூலம் ஆலய வளாகத்தில் போக்கு வரத்துப் பிரச்சினையை கட்டுக் குள் கொண்டு வர இத்திட்டம் ஏதுவாக அமையும், என்று தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்