இந்தாண்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய 20 வாரப் பேறுகால முழு விடுமுறையை மலேசிய ஸ்டெண்டர்ட் சார்டெட் வங்கி அறிவித்துள்ளது. மேலும், மனைவி கர்ப்பமாக இருந்தால் ஸ்டெண்டர்ட் சார்டெட்டில் பணியாற்றும் அவரின் கணவருக்கு 2 வாரம் விடுமுறை வழங்கப்படும். அதே போன்று குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர்களும் தத்தெடுக்கும் விவகாரத்திற்காகச் சம்பளத்துடன் கூடிய 2 வாரம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இவற்றைத் தவிர்த்து, ஊழியர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப பணியாற்றும் வேலை நேரத்தையும் அந்த வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அடிப் படையில், நிர்வாகியிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் அவர்கள் பகுதி நேரமாகவோ, குறிப்பிட்ட நாட்களில் இல்லத்திலிருந்து வேலை செய்யவோ முடியும். வங்கியில் பணியாற்றும் ஊழியர்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இவற்றை அறிவித்ததாக வங் கியின் மனித வளப் பிரிவின் தலைவர் ஃபிளோரன்ஸ் ஃபூ தெரிவித்தார். ஊழியர்களின் நலன் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதில் பல முயற்சிகள் மேற் கொள்ளப்படும் எனவும் இது போன்ற ஊக்கு விப்புகளின் வழி ஊழியர்களின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். (எப்எம்டி)
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்