(உலுசிலாங்கூர்) கடந்த மாதம் உலுபெர்ணம் களும்பாங் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு உலுசிலாங்கூர் நாடா ளுமன்ற உறுப்பினரும் துணை கல்வி அமைச்சருமான ப.கமலநாதன் வருகை புரிந்தபோது ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை குறித்து எதுவும் கேட்கவில்லை என தமிழ் நாளிதழில் அறிக்கை விட்டிருப்பது அப்பட்ட மான பொய் என அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ப.ராஜ்குமார் பதிலடி கொடுத்தார். கடந்த 3.3.2017 ஆம் நாள் காலை மணி 7.30 அளவில், மாணவர்களை புதிய இணைக் கட்டடத்திற்குள் அழைத்துச் செல்வதற்கு ப.கமலநாதன் வருகைப் புரிந்திருந்தார். அவருடன் ம.இ.கா தலைவர்களும் வட்டாரத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களும் வருகை புரிந்திருந்தனர். அச்சமயம் அவரிடம் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து வினவிய போது, விரைவில் ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினாரே தவிர மே 2 ஆம் தேதி என குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் அதற்கான குரல் பதிவும் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். இரண்டாவதாக அவர் குறிப்பிட்டுள்ளது போல் பெற்றோர்களின் அனுமதியின்றி மாணவர்கள் நிறுத்தி வைக்கப்படவில்லை. 45 பெற்றோர்கள் அமைதி மறியலில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்து கையெழுத் திட்டுள்ளனர் என்றார். அப்பட்டமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ள ப.கமல நாதன், பள்ளியின் முன் மறியல் நடந்த பிறகுதான் ஆசிரியர்களின் நியமனக் கடிதங்களை உடனடியாக அதிகாரிகள் மூலம் கொண்டு வந்துகொடுக்க முடிந்ததா என்று கேள்வி எழுப்பினார். பள்ளியின் இணைக் கட்டடம் பாதுகாப்பானது என நகராண்மைக் கழகமும் கல்வியமைச்சும் பரிசோதித்து உறுதியளித்துள்ளதாக ப.கமலநாதன் கூறு கிறார். அப்படி யென்றால் உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் அக்கட்டடத்திற்கு ஏன் நிரந்தர தகுதிச் சான்றிதழ் வழங்காமல் தற்காலிக சான்றிதழை வழங் கியுள்ளது என வினவினார். மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் இப்பள்ளியில் நான்கு மாதங்களாக நிலவும் ஆசிரியர் பற்றாக் குறைக்கு தீர்வு காண இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோம் என தெரிவித்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளதாகக் கூறினார். இதுநாள் வரை பள்ளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள பள்ளி பக்கமே வராத சில ம.இ.கா கிளைத் தலைவர்கள் எனக் கெதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக ப.ராஜ்குமார் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்