1990 ஆம் ஆண்டு பேங்க் நெகாராவிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய அந்நியச் செலாவணி இழப்புத் தொடர்பான ஊழலில் சிறப்பு பணிக் குழுவிற்கு நான் வழங் கிய வாக்குமூலத்தை துன் மகாதீருக்கு எதிராக பயன்படுத்த அரசாங்கம் இப்போது திட்டம் கொண்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார். அந்த ஊழலை விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவிடம் 1990 இல் பேங்க் நெகாராவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப் தான் மூலகாரணம் என்று நான் தெரிவித்து இருந்தேன். தற்போது அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் முன்னாள் பிரதமரும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியை தோற்றுவித்தவருமான துன் மகாதீருக்கு எதிராக என்னுடைய வாக்கு மூலத்தை பயன்படுத்த அரசாங்கம் விரும்புகிறது என்று அன்வார் தெரிவித்தார். பேங்க் நெகாராவின் அந்நியச் செலாவணியில் ஏற்பட்ட இழப்பினால் டான் ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப் பதவி விலக வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்த அன்வார், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். எனினும் டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப், பின்னர் துன் அப்துல்லா அகமட் படாவி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற போது, இரண்டாவது நிதி அமைச் சராக நியமிக்கப்ப்ட்டார். ஆனால், நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலத்தில் டான்ஸ்ரீ நோர், எந்த சமயத்திலும் அந்த நிதி கழகத்தில் சம்பந்தப்படக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்துல்லா அகமட் படாவி காலத்தில் டான்ஸ்ரீ நோர் இரண்டாவது நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். நான் அவரை பதவி விலகும்படி அறிவுறுத்தியபோது, தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்து வரும் மகாதீருக்கு எதிரான எனது வாக்குமூலத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. என் னைப் பொறுத்தவரையில் மகாதீருக்கு எதிராக என்னுடைய வாக்குமூலத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அந்நியச்செலாவணி ஊழல் தொடர் பில் அன்வார் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்று தொடர்புத் துறை மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சல்லே சையிட் கெருவாக் கூறி யிருப்பது தொடர்பில் கருத்து கேட்டபோது அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்