அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் செபராங் நகராண்மைக் கழகத் துக்கு சொந்தமான சந்தை, கழகத்தின் கீழ் பதிந்துள்ள வியாபாரிகளுடன் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது ஜூன் முதல் நாள் தொடக்கம் அமலுக்கு வரும் என்று செபராங் பிறை நகராண்மைக் கழக தலைவர் டத்தோ மைமூனா முகமட் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த உத்தரவு அந்நிய நாட்டினராக குடியுரிமை பெற்றவர்களுக்கும் அடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த தடை உத்தரவின் முக்கிய நோக்கம் நகராண்மைக் கழகத்துக்கு சொந்ததமான சந்தை மற்றும் அங்காடி கடைகளில் அந்நிய நாட்டினர் வியாபாரம் செய்வதை துடைத்தொழிக்கும் ஒரு முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே செபராங் பிறை நகராண்மைக் கழகத்துக்கு 31 சந்தைகளும் 66 வியாபார தளங்களை கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், இதில் 5600 பேர் ஊழியர்களாக பணியாற்று வதுடன், இந்த புதிய விதி முறையினால் அந்நிய நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க அங்காடி உரிமையாளர்கள் அறிவுறுத்தப் பட்டிருப்பதாக அவர் மேலும் விவரித்தார். இந்த புதிய விதி முறையினை மீறும் அங்காடி கடை உரிமையாளர்களின் வியாபார உரிமம் தடை விதிக்கப்பட்டு ரத்து செய்யவும் கூடலாம் என்று கூறிய டத்தோ மைமூனா இது நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்காத வியாபாரி களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். இதர வியாபார கடைகளில் உள்நாட்டை சேர்ந்த ஊழியர்கள் 30% இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், வியாபார கடைகளில் பொருத் தப்படும் விளம்பர பலகைகளில் மலாய்,சீனம்,ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெறலாம் என்றும் இதர மொழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த புதிய விதி முறை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்த எண்ணம் கொண்டிருந்தாலும் வியா பாரிகள், அங்காடி வியாபாரிகள், பொது மக்களின் கருத்துக்களை முதலில் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் கருத்துக்களை செபராங் பிறை நகராண்மைக் கழகத்துக்கு சொந்தமான அகப் பக்கமான தீதீதீ.ட்ணீண்ணீ.ஞ்ணிதி.ட்தூஅல்லது நகராண்மைக் கழக முகநூலான ட்ணீண்ணீ ஆகியவற்றில் கருத்துக்களை தெரிவிக் கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்