(ஜார்ஜ்டவுன்) பிறந்தநாளிலிருந்தே இதயக் கோளாறு நோயினால் அவதி யுற்று வரும் இ.சுனிதா (வயது 17) என்ற மாணவியின் இதய அறுவை சிகிச்சைக்கு 35,000 வெள்ளி தேவைப்படுவதாக அவரின் தாயார் ரா.சிவனேஸ்வரி (வயது 54) தெரிவித்தார். புக்கிட் மெர்தாஜம் பகுதியில் மெரி இண்டா இடைநிலைப் பள்ளியில் பயின்று வரும் சுனிதா வுக்கு 1 வயதிலேயே இதயத்தில் துளை இருந்ததால் கடந்த 2001ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மீண்டும் வலி ஏற்பட்டதால் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு அவரின் இதயத்தில் 3 துளைகள் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. தொடர்ந்து தேசிய இதய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு துளைகளை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தது. 2016ஆம் ஆண்டு சுமார் 3 முறை மோசமான உடல் நிலை சரியில்லாமல் போனதால் உடனடி அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள் ளப்பட்டது. அதனையொட்டி ஒரு சில அரசு சாரா இயக்கத்தின் கருணை கலை இரவின் வழி 6,371 வெள்ளி நன்கொடையாக கிடைத்தது எனவும் அதில் பாதி மருந்து, சிகிச்சை மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சிவனேஸ்வரி சொன்னார். கணவனை இழந்து தனித்து வாழும் தாயாக வாடகை அடுக்கு மாடி வீட்டில் வசித்து வரும் சிவனேஸ்வரி பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்குமாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். மோசமாகிக் கொண்டு போகும் தன் மகளின் உடல் நலத்தை குணமாக்க மக்களின் பேராதரவை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். நிதியுதவி செய்ய விரும்புவோர் 012-4675068 என்ற எண்ணில் சிவனேஸ்வரியை தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்