கெடா பாடாங் செராய் எனுமிடத்தைச் சேர்ந்த எல்.கவிச் சோலை மோகன் ராமலிங்கம் தம்பதியருக்கு பிறந்த நான்கு மாத குழந்தை இன்மொழியின் இருதய அறுவை சிகிச்சைக்கு பினாங்கி லுள்ள ஒரு தனியார் மருத்துவ மனை 19.5.2017 தேதியை நிர்ணயித்துள்ளது. இன்மொழியின் இருதய அறுவை சிகிச்சைக்கு அந்த தனியார் மருத்துவமனை 70 .000.00 வெள்ளியை கோருவதாக குழந்தையின் தந்தை ஆர். மோகன் நேற்று இங்கு செய்தியா ளர் களிடம் தெரிவித்தார். மகளின் சிகிச்சைக்காக அதிகமான விடுமுறை எடுத்ததால் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாக அவர் சொன்னார். இன்மொழியோடு மூன்று பிள்ளைகள் மோகன் தம்பதிகளுக்கு உள்ளனர்.தமது மூன்றாவது மகள் இன்மொழிக்கு இப்படியொரு நிலை ஏற்படும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று இத்தம்பதிகள் கண்ணீர் மல்க இங்கு கூறினர். எப்படியா வது எங்கள் குழந்தையை காப் பாற்ற வேண்டும். இதன் காரண மாக நாங்கள் பொது மக்களின் உதவியை நாடியுள்ளதாக மோகன் தெரிவித்தார். மலேசிய இந்து தர்மமாமன்ற வடமாநில தலைவர் வி. நந்த குமார் தங்களது சங்கத்தின் சார் பில் முதல் கட்டமாக ஆயிரம் வெள்ளியை வழங்குவதாக கூறி னார். நாட்டிலுள்ள பல அன்பு உள்ளங்களும் இந்த தம்பதிகளின் பிள்ளைக்கு உதவ வேண்டுமாறு அவர் கேட்டுக் கொண்டார். எவ்வளவோ செலவு செய்கிறோம் ஒரு குழந்தையின் உயிரை காப் பாற்ற ஏன் நாம் அந்த தம்பதிக ளுக்கு உதவக்கூடாது என்று நேற்று செய்தியாளர்களை சந் தித்த போது அவர் இதனை தெரிவித்தார். குழந்தை எம்.இன் மொழிக்கு உதவ விரும்புவோர் 017- 5538929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்