மலேசியத் திருநாட்டின் தாய் வைணவத் திருத்தலமான கிள்ளான் சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் அனைத்து சந்நிதிகளும் முழுக் கருங்கல் திருப் பணிகள் சிற்ப சாஸ்திர முறையில் பூர்த்தியடைந்துள்ள நிலையில் வரும் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற வுள்ள ஆலய மகா கும்பாபிஷே கத்திற்கு நாடளாவிய நிலையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து கூடுவர் என்று ஆலயத் தலைவர் சங்க ரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார். வாழ்நாளில் ஒருமுறையே காணும் வாய்ப்புள்ள இத்த கையதொரு கருங்கல் ஆலய மகா கும்பாபிஷேகத்தைக் காணவும் இறைவனின் அருட்கடாட்சம் பெறவும் பெருந்திரளான பொது மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் நிச்சயம் லட்சக்கணக்கானோர் திரள்வர் என்று அவர் சுட்டிக் காட்டினார். இதன் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மேற்படி மகாகும்பாபி ஷேக சிறப்புப் பூஜை களை வழிநடத்துவதற்கு தமிழ கத்திலிருந்து 15 சிவாச்சாரியர் கள், 50 பட்டாச்சாரியார்கள் வர வழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பக்தகோடிகள், பிரமுகர்கள், வருகையாளர்கள் போன்றோருக்கான சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆலய நிர்வாகம் சிறந்த முறையில் ஏற்படுத் தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு யாக சாலைப் பூஜைகளும் அத னைத் தொடர்ந்து 30-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து 10.30-க்குள் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறு வதற்குரிய அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்