தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் பிறப்புப் பத்திரம் எடுக்க முடியாமல் தவிக்கும் மாதுவிற்கு கிள்ளான் புதிய தலைமுறை இயக்கம் உதவிக் கரம் நீட்டியது. பெற்றோருக்கு குடியுரிமை இருப்பதால் சம்பந்தப்பட்ட இரண்டு பிள்ளைகளுக்கும் பிறப்புப் பத்திரம் விண்ணப்பத் தில் சிக்கல்கள் தோன்றாது என்று அவ்வியக்கத்தின் தலைவர் மா.தில்லையம்பலம் நம்பிக்கை தெரிவித்தார்.கம்போங் ஜாவா, தாமான் ஆலம் நாத்தாவில் தன்னுடைய கணவர், ஒன்பது பிள்ளைகளுடன் வசித்து வரும் தேன்மொழி ராமகிருஷ்ணன் (வயது 32) இதற்கு முன் ஜொகூர், கூலாய் தேசிய பதிவுத் துறையிடம் மனு அளித்ததாக தெரிய வருகிறது. ஆனால், கிள்ளான் தேசிய பதிவுத் துறையை அணுகும்படி அது அறிவுறுத்தியதாக இதற்கு முன் ஜொகூர், ஸ்கூடாய், ஸ்ரீ பூலாயில் வசித்து வந்த தேன் மொழி குறிப்பிட்டார். இவருடைய 8 வயது பெண் பிள்ளை ஜெ.மைதிலிஸ்வரிக் கும் 11 மாத ஆண் குழந்தை அஷ்விந்திரனுக்கும் உரிய காலத்தில் பிறப் புப் பத்திரம் பதிவு செய்யப்படவில்லை. இதனிடையே தேன் மொழி யின் 9 வயது மகள் யுவனேஸ் வரி, பிறவியிலேயே ஊமை, காது கேளாதவர் என்பதால், சிறப்பு கல்வி வாய்ப்புக்கு முயற்சி செய்யப்படும் என்று தில்லையம்பலம்தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்