பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கினால் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் திட்ட வரைவை (எம்ஐபி) குறை கூறும் எதிர்க்கட்சியினரின் கபட நாடகத்தை மஇகா இளைஞர் பகுதி நேற்று சாடியது. ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் இத்திட்டத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க இயலாமல் குறை கூறுவதி லேயே சிறந்து விளங்குவதாக மஇகா இளைஞர் பகுதி தலைவர் சி.சிவராஜ் கூறினார். இந்த திட்ட வரைவு தொடர்பான சந்திப்புக் கூட்டத்தை நாங்கள் நடத் தியபோது, கருத்துக்களையும் ஆலோ சனை களையும் வழங்க முன் வரும்படி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தற்பெருமை காரணமாக அவர்கள் வந்து கலந்து கொள்ளவில்லை. இப்போது வழக்கம்போல் தேசிய முன்னணி அரசாங்கத்தின் நேர்மையான, உண்மையான முயற்சியை அவர்கள் குறை சொல்ல தொடங்கி விட்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த திட்ட வரைவை ஒரு தேர்தல் தந்திரம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுவது தவறு என்று சிவராஜ் தெரி வித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்