தாமான் ஸ்ரீ கெபாயான் அடுக்ககத்தின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலியான ஜேக்லின் ரிபோட் (வயது 25) வீட்டின் பால்கனியில் துணியை உலர்த்தியபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார். மாலை 4.30 மணியளவில் அவர் அடுக்ககத்தின் கீழ் பகுதியில் விழுந்துள்ளதைக் கண்டு அங்குள்ளவர்கள் பாதுகாவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதுகாவலர்கள் போலீசுக்கு தெரியபடுத்தியுள்ளனர். மூன்றாவது மாடியின் பால்கனியில் துணிகளை உலத்துவதற்காக இருந்த இரும்புக் கம்பி உடைந்திருந்ததை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அந்த இடத்தில் கருப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலி இருந்ததால், துணியை காய வைப்பதற்காக அம்மாது நாற்காலியின் மீது ஏறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 12 மீட்டர் உயரத்திலிருந்து அம்மாது கீழே விழுந்துள்ளதாக கோத்த கினபாலு மாவட்டத்தின் இடைக்கால போலீஸ் படைத் தலைவர் ஜோர்ஜ் தெரிவித்தார். அம்மாது துணியை காய வைத்தபோது இரும்புக் கம்பி அதன் பிடியிலிருந்து கழண்டுள்ளது. இதனால் பிடிமானமில்லாமல் அம்மாது கீழே விழுந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்