சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் கபாலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மலேசியாவில் படமாக்கப்பட அனுமதிக்கப் படக் கூடாது என்று ஜசெக சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கூறினார். கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த ரஜினிகாந்த்துக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் விடுத்திருக்கும் அழைப்பை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.என்.ராயர் கூறினார். அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நஜீப், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை மலேசியாவில் படமாக்கும்படி ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டார்.அந்தப் படம் நல்லதைவிட தீங்கையே கூடுதலாக விளைவித்து இருப்பதாக ஸ்ரீ டெலிமா (பினாங்கு) சட்டமன்ற உறுப்பினர் ராயர் கூறினார். மாறாக, அரசாங்கம் உள்நாட்டு இந்திய திரைப்படத் துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் உள்நாட்டு இந்திய இயக்குநர்களையும் கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஒற்றுமை, மரியாதை, கலாச்சார பன்முகத்தன்மை, பெரியோர்களை மதித்தல் போன்ற நற் பண்புகளை ஊக்கு விக்கக்கூடிய உள்நாட்டு இந்திய திரைப்படங்களின் தயாரிப்புக்கு ஆதரவு வழங்கும்படி ராயர் தெரிவித்தார். இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல்களில் சேர கபாலி படம் ஊக்குவித்திருப்பதாகக் கூறிய அவர், இது கபாலி கலாச்சாரம் என வருணித்தார்.பள்ளி மாணவர்கள் குண்டர் கும்பல்களில் சேருவது இப்போது ஒரு பழக்கமாக வந்துவிட்டதாக அவர் கூறினார். கிள்ளானில் கடந்த வாரம் ஒரு பள்ளியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கபாலி கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடே என்றார் அவர். கபாலி ஒரு வெற்றிகரமான படம் என்ற போதிலும், சமூகத்தில் அனைத்துவிதமான எதிர்மறையான கூறுகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருப்பதாக ராயர் கூறினார். வன்செயல், குண்டர்தனம், கொலை, போதைப் பொருள் வியாபாரம் போன்றவை இதில் அடங்கும் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்