(உலுசிலாங்கூர்) இறுக்கமான சிலுவாரை அணிந்திருந்ததாக கூறி, இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவனை கைலியை அணியச் செய்து அவமானப்படுத்திய ஆசிரியர் ஒருவர், பிறகு அவனின் பள்ளிச் சிலுவாரை திரும்ப கொடுக்காமல் வீட்டிற்கு சென்று விட்டதால் கைலியை அணிந்து கொண்டே வீட்டிற்குச் சென்ற அந்த மாணவன் தன் தாயாரிடம் கூறி அழுதது இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புக்கிட் புருந்தோங், புக்கிட் செந்தோசா 2 இடைநிலைப் பள்ளியில், இறுக்கமான கால் சட்டையை அணிந்திருப்பதாக மாணவன் ஜெகதீஸ்வரன் மீது குற் றஞ்சாட்டிய கட்டொழுங்கு ஆசிரியர் கால் சட்டையிலுள்ள நூலினை அகற்றுமாறு பணித்ததோடு பள்ளி முடியும் வரை லுங்கியை அணிய வைத்தது அராஜகமான செயல் என தமிழர் ஒற்றுமை குடும்ப இயக்க துணைத் தலைவர் தினேஷ் கூறினார். நேற்று முன்தினம் பிற்பகல் மணி 1.00க்கு நடைபெற்ற பள்ளி சபை கூடலுக்குப் பிறகு படிவம் இரண்டில் பயிலும் மாணவன் ஜெகதீஸ்வரனை கட் டொழுங்கு ஆசிரியர் அஸ்ருல் அழைத்துள்ளார். அவர் நீ அணிந்திருக்கும் கால் சட்டை இறுக்கமாக இருக்கின்றது, அதனைக் கழற்றி இறுக்கமான பகுதி யிலுள்ள நூலினை அறுத்து தளர்த்துமாறு பணித்துள்ளார். அதுவரை மாற்று உடுப்பாக அணிந்து கொள்வதற்கு லுங்கி ஒன்றினை வழங்கியுள்ளார். இறுக்கமான பகுதியினை தளர்த்திய பின் கால் சட்டையை ஆசிரியரிடம் மாணவன் ஒப்படைத்துள்ளான். மாலை மணி 6.30 வரை காத்திருந்தும் கால்சட்டையை ஆசிரியர் கொடுக்க வராததால் மாணவன் அவரைத் தேடிச் சென்றுள்ளான். கட்டொழுங்கு ஆசிரியர் வீட்டுக்குச் சென்று விட்டதாகவும் அவரது அலமாரி சாவியும் இல்லாததால் வேறு வழியின்றி ஜெகதீஸ்வரன் லுங்கியுடன் வீடு வந்து சேர்ந்துள்ளான். வீட்டுக்கு அழுது கொண்டே வந்த மகனது நிலையைக் கண்ட தாயார் பதறிப் போயுள்ளார். லுங்கியுடன் இருந்ததால் சிற்றுண்டி உண்பதற்குக் கூட செல் லாமல் அவமானத்தால் பள்ளி நேரம் முழுதும் வகுப்பிலேயே இருந்திருக்கிறான். இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த கட்டொழுங்கு ஆசிரியர், மனித நேய மில்லாத ஆசிரியர் என சாடிய தாயார் மாலை மணி 7.15 அளவில் புக்கிட் செந்தோசா காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இறுக்கமான கால் சட்டை அணிந்த தன் மகனுக்கு ரோத்தான் அடி கொடுத்திருக்கலாம், வீட்டுக்கு திருப்பி அனுப்பியிருக்கலாம் அல்லது பெற்றோரிடம் தெரிவித்திருக்கலாம். அதை விடுத்து லுங்கியை அணியச் சொல்லி அவமானப்படுத்துவது அத்துமீறிய செயல் என தாயார் சாடினார். ஜெகதீஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலையைக் கேட்டறிந்த தினேஷ் காவல் துறையில் புகார் செய்வதற்கும் நேற்று பள்ளியின் முதல்வரை சந்திப்பதற்கும் ஏற் பாடுகளை செய்துள்ளதாகக் கூறினார். துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன் நாடளுமன்ற உறுப்பினராக இருக்கும் உலுசிலாங்கூர் தொகுதியில் இத் தகைய சம்பவம் நடந்துள்ளதால், அராஜகமான முறையில் நடந்து கொண்ட கட்டொழுங்கு ஆசிரியர் மீது கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினேஷ் செல்வராஜ் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்