img
img

தாயார் கண்ணெதிரே 3 பிள்ளைகள் பலி!
வியாழன் 27 ஏப்ரல் 2017 12:17:23

img

(பகாவ்) தனது காரில் நான்கு பிள்ளைகளை ஏற்றிச்சென்ற இடைநிலைப்பள்ளி ஆசிரியை மற்றொரு காருடன் ஏற்பட்ட மோதலில் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்தார்.நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் பகாவ் ரொம்பின், ஜாலான் பாசீர் புசார், 12ஆவது கிலோ மீட்டரில் இவ்விபத்து ஏற்பட்டது. பெல்டா ஜெல்லாய் நில குடியேற்றத்திலுள்ள வீட்டிலிருந்து தன்னுடைய நான்கு பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு சென்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியை யான தவமணி கிருஷ்ணன் (வயது 36) தனது ஹோண்டா காரில் பகாவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது மற்றொரு காருடன் ஏற்பட்ட சாலை விபத்தில், கி.தனேஸ்வர் (வயது 14), கி.டேனிஷா (வயது 9) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலும் மற்றொரு மகள் வர்ஷனா (வயது 11) கோலப் பிலா மருத்துவமனையிலும் மரணமடைந்ததாக மாவட்ட போலீஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். இவ்விபத்தில் ஆசிரியை தவமணியும் மற்றொரு மகன் நரேஸ்வரர் (வயது 7) ஆகிய இருவரும் உயிர் தப்பினர். ஆசிரியை தவமணி சிகாமட் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வெளியேறினார். அவரின் மகன் நரேஸ்வரர் மலாக்கா புத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப் பட்டது. ரொம்பின் வட்டாரத்தையே உலுக்கிய இந்த சோக சம்பவம் அவ்வட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நன்கு அறிமுகமான ஆசிரியை தவமணியின் மூன்று பிள்ளைகளின இறுதிச் சடங்கு இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெறும் என்று உறவினர் ஒருவர் கூறினார். விபத்து சம்பவம் அறிந்து தீய ணைப்புப் படையினர் கார் இடுக்கில் சிக்கிய அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மற்றொரு காரில் வந்த ஆடவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img