மலாக்காவின் புக்கிட் பாரு சட்டமன்றத் தொகுதியில் 32 ஆவி உறுப்பினர்கள் ஒரே வீட்டில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக பெர்சே 2.0 அம்பலப்படுத்தியுள்ளது. புக்கிட் கட்டில், தாமான் சாவ்ஜானா புத்ரா, ஜாலான் எஸ்.ஜே1 என்ற முகவரியில் உள்ள வீட்டில் 32 வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டி ருப்பதாக பெர்சே அதிகாரி சன் சூ சோங் கூறினார். நேற்று இது தொடர்பான நிருபர்கள் கூட்டத்தில் அவர் இவ்விவரங் களை வெளியிட்டார். ஒரே வீட்டில் 30 பேர் தங்கி யிருப்பது எப்படி சாத்தியமாகும்? அவர்கள் அனை வரும் அங்குள்ள சட்டமன்ற அல் லது நாடாளு மன்றத் தொகு தியைச் சேர்ந்தவர்களா என்பதை தாங்கள் அறிய விரும்புவதாக அவர் சொன்னார். அதே சமயம், மேலும் சுமார் 41 வாக்காளர்கள் எந்தவித முறையான முகவரியும் இன்றி நான்கரை மைல், கம்போங் புக்கிட் பெருவாங்கிற்கு மாற்றப்பட் டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். முறையான வீட்டு முகவரி இல்லாத வாக்காளர்கள் பதிவை எவ்வாறு தேர்தல் ஆணையம் அனு மதிக்க முடியும் என்று அவர் வினவினார். இதனிடையே, ஆவி உறுப்பினர்களின் பதிவை தேர்தல் ஆணையம் அனுமதித்திருப்பது கேலிக்குரியதாக இருக்கிறது என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்