img
img

மலேசிய இந்தியர்களுக்கான திட்ட வரைபு!
புதன் 26 ஏப்ரல் 2017 17:14:47

img

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடக்கி வைக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்கான திட்ட வரைவு, ஓர் அரசி யல் கண் துடைப்பு என்றும் தேர்தல் தந்திரம் என்றும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறினார். இந்த திட்டவரை வெறும் அரசியல் கண் துடைப்புதான் என இந்திய சமூகம் சந்தேகப்பட்ட காரணங்கள் இருப்பதாக ஜசெக உதவித் தலைவருமான அவர் குறிப்பிட்டார். இது நிச்சயம் ஒரு தேர்தல் தந்திரமே தவிர வேறொன்றும் இல்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இந்தியர்களுக்கான மத்திய அரசாங்க திட்ட வரைவை தொடக்கி வைத்த நஜீப், 100 கோடி வெள்ளிக்கும் மேற்பட்ட ஒதுக்கீடுகளை அறிவித்தார். மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் தக்கூடிய இந்த திட்ட வரைவு, ஒரு முக்கிய ஆவணமாகும் என்றும் இது வெறும் பேச்சல்ல என்றும் நஜீப் குறிப்பிட்டார். இந்த திட்ட வரைவு அறிவிப்பிற்கும் பொதுத் தேர்தலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் அவர் அறிவித்தார். இதுபற்றி கருத்துரைத்த குல சேகரன், தேர்தல் வரும்போதெல்லாம் கேட்பதற்கு இனிப்பாக இருக்கக்கூடிய நடவடிக்கைகளை அறிவிப்பது மட்டுமே தேசிய முன்னணியின் சாதனை யாகும் என்று குறிப்பிட்டார். வரும் பொதுத் தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு படுதோல்வியை எதிர்நோக்கவிருக்கும் தேசிய முன்ன ணிக்கு ஆதரவாக வாக்காளர்களை கவரவே இந்த திட்ட வரைவு தொடக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய சமூகத்திற்கு உதவுவதில் தேமு அரசாங்கம் நேர்மையாகவும் கடப்பாட்டுடனும் ஆக்க கரமாகவும் செயல்பட்டிருந்தால், பொருளாதார, கல்வி, சமூக, வீடமைப்பு, வேலை வாய்ப்புத் துறைகளில் இந்திய சமூகத்தினர் இன்னமும் பிரச்சினைகளை எதிர் நோக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். நாடற்ற இந்தியர்கள் பிரச்சினைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தீர்வு காணப்பட்டிருக்கும் என்றும் குலசேகரன் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img