ஈப்போ உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏலம் போகவிருந்த ஈப்போ தாமான் பெர்மாய் லொக் லிம் கார்டனைச் சேர்ந்த ஓர் இந்திய மாதின் வீடு பி.எஸ்.எம் சரஸ்வதியின் முயற்சியால் காப்பாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காலில் ஒருவகையான நோயின் காரணமாக தான் செய்து வந்த லோரி போக்குவரத்துத் தொழிலை இவரால் தொடர முடியாமல் போனது. இதன் காரணமாக கடந்த பிப் ரவரி 2016 முதல் இவரால் வங்கி யின் வீட்டுலோன் கட்ட இயலவில்லை. குத்தகை அடிப்படை யில் லோரி ஓட்டும் கணவரின் வருமானமும் நிரந்தரமில்லாத தால், இரண்டு குழந்தைகள் இன்னும் படிப்பதாலும் இவரால் வீட்டுக்கான மாத லோன் கடனை கட்ட இயலவில்லை. வீட்டுக்கான MRTA காப்புறுதி இருந்தும், ஈப்போவில் உள்ள வங்கி அதற்கான முயற்சிகளை எடுக்காமல், இந்த வீட்டை வாங்குவதற்கு ஆள் இருக்கிறது, முடியவில்லை என்றால் விற்று விடுங்கள், இல்லையேல் அதற் கான பணத்தை கட்டுங்கள் என பேங்க் இந்த மாதினை நிர்பந் தப்படுத்தியதால், வேறு வழி யின்றி பி.எஸ்.எம். சரஸ்வதியின் உதவியை நாடினார். கடந்த வாரம் அம்மாதினை அழைத்துக் கொண்டு ஈப்போவில் உள்ள அந்த வங்கிக்கு சரஸ்வதி சென்று 25.4.2017இல் நடைபெறவிருந்த ஏலத்தை நிறுத் துங்கள். இவர் நோய்வாய்பட்டிருப் பதால் வீட்டுக்கான உரிய எம்.ஆர்.தி.ஏ. எனும் காப்புறுதியினை பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தினார். ஆனால், ஒன்றும் செய்ய முடியாது குறிப் பிட்ட தேதியில் ஏலம் நடை பெறும் என ஈப்போவில் உள்ள வங்கியின் அதிகாரிகள் கையை விரித்து விட்டனர். வேறுவழியின்றி, நேற்று விடிற்காலை அந்த மாது அவர்தம் குடும்பத்தாரை கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அந்த வங்கியின் தலைமை யகத்தின் முன் ஏலத்தை நிறுத்தக் கோரும் ஆட்சேப மறியலில் ஈடுப்பட்டனர். சில நிமிடங்களில் வங்கியின் பொறுப்பாளர் வந்து விவரத்தை கேட்ட றிந்து பின்னர் சரஸ்வதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உண்மை நிலவரங்களை அறிந்த பின்னர், வீட்டுகான காப்புறுதியினை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும்,ஈப்போவில் நடை பெறவிருந்த ஏலத்தை உடனே நிறுத்தினார். இனிமேல் ஏதேனும் வீட்டுவிவகாரமாக பிரச்சினைகள் இருந்தால் நேரிடையாக தலை மையகத்திற்கு தொடர்பு கொள்ளும்படி சரஸ்வதியை வங்கியின் அதிகாரி கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்