(ஜார்ஜ்டவுன்) என் பிள்ளைகளுக்குத் தந்தை நான்தான் என்பது மரபணு சோதனை வழி நிரூபிக்கப்பட்டும், பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்க தேசியப் பதிவு இலாகா மறுத்து வருவதாக எம்.வெங்கடேஸ்வரன் என்ற லோரி ஓட்டுநர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம், மரபணு சோதனை முடிவுகளில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் பிள்ளைகளுக்கு வெங்கடேஸ்வரன்தான் தந்தை என்பது நிரூபணமாகி யும் அவரின் மூன்று பிள்ளைகளுக்கும் குடியுரிமை வழங்க மறுப்பதன்வழி தேசியப் பதிவு இலாகா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்றது என ஃபிரீடம் எனும் அரசு சாரா இயக்கத்தின் பேச்சாளர் என்.கணேசன் கூறுகிறார். சூரியா (12), அகிலாண்டேஸ்வரி (11), தூரநாயகி (10) ஆகிய அம்மூன்று பிள்ளைகளும் செபெராங் ஜெயா மருத்துவமனையில் பிறந்தவர்கள். அவர்க ளின் பிறப்புப் பத்திரத்தில் குடியுரிமை அற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சாதாரண லோரி ஓட்டுநரான வெங்கடேஸ்வரன் பல ஆண்டுகளாக தனது பிள்ளைகளுக்கு குடியுரிமைக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், அலைக்கழிக்கப்பட்டாரே தவிர பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடைக் கவில்லை என்று அவர் சொன்னார். பிள்ளைகளின் ஒரு பெற்றோராவது மலேசிய பிரஜையாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த மரபணு சோதனை நடத்தப்பட்டது.கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை தேசியப் பதிவு இலாகா முற்றிலும் நிராகரிப்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. விண்ணப்ப பரிசீலனையின் போது பிள்ளைகளின் தாயார் உடனிருக்க வேண்டும் என்றும் திருமணப் பதிவு அவசியம் தேவை என்றும் அவர்கள் கூறி விட்டனர். வெங்கடேசனின் திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அவர்களின் குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரிப்பதாக அவ்விலாகா மேலும் தெரி வித்துள்ளது. சீன, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேசனின் பிரிந்து வாழும் மனைவி ஏழாண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா திரும்பிச் சென்று விட்டார். தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி அவர் இங்கிருந்து வெளியேறினார். இதுவரை திரும்பி வரவில்லை. தேசியப் பதிவு இலாகாவின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர், அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கு தாம் கடிதம் எழுதி யிருப்பதாகவும், இன்று வரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கணேசன் மேலும் கூறினார். அப்பிள்ளைகளின் குடியுரிமை விண்ணப்பங்களை நிரா கரிப்பதற்கு பதிவு இலாகா அற்பமான பதிலை அளித்து வருகிறது. சட்ட ரீதியில் இப்பிள்ளைகளின் உரிமைகளை அது நிராகரித்து வருகிறது. ஒரு மலேசியப் பிரஜையாகவும் தனித்து வாழும் தந்தையாகவும் இருந்து வரும் வெங்கடேஸ்வரன் தன் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். அப்பிள்ளை களின் தந்தை வெங்கடேஸ்வரன்தான் என்பது 99.9% நிரூபணமாகுவதாக 2016 ஜூன் மாதம் வெளியான இராசயண இலாகா அறிக்கை காட்டுகிறது. ஆனால், பதிவு இலாகா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. குடியுரிமை பெறுவதற்கு அப்பிள்ளைகளுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறினால், பள்ளிக்கூடத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவர். ஏற்கெனவே அம்மூன்று பிள்ளைகளும் பட்டர்வொர்த், மாக் மாண்டின் தமிழ்ப்பள்ளிக் கூடத்திலிருந்து இரு முறை வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆகக் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் அவ்வாறு நடந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்