நாடு முழுவதும் மொத்தம் 402 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கட்டொழுங்கு பிரச்சினை நிலவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கண்காணிக்கப் பட வேண்டிய முக்கியமான பள்ளிக்கூடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கல்வி தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் காயர் முகமட் யூசுப் கூறினார். மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினைகளும் தவறான நடத்தைகளும் அப்பள்ளிக்கூடங்களில் அதிகமாக நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். எனினும், பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் சொன்னார். மொத்தத்தில் கடுமையான ஒழுங்கீனப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஒவ்வொரு பள்ளியிலும் அம் மாதிரி 10 முதல் 15 மாணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஆலோசனைக்காக அனுப்பப்படுவர். இந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது சிலாங்கூர் மாநிலம் என்பது அம்பலமாகியுள்ளது. இங்கு மொத்தம் 76 பள்ளிக்கூடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து ஜொகூர் (63), நெகிரி செம்பிலான் (40), பகாங் (37), பினாங்கு (37) என பள்ளிகூடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் பள்ளிக்கூட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பை வழங்கி வந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று காயர் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்