இந்திய சமுதாய வளர்ச்சியிலும், அது சார்ந்த பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்து தீர்வு காண் பதிலும், நமது தமிழ்ப் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக் கின்றன. அத்தகைய சூழலில் இந்த துறையைச் சார்ந்தவர்களே இதற்கு கீழறுப்பு வேலைகளை செய்வது சமுதாயத்திற்கு நல்லதல்ல என சிலாங்கூர் பத்திரிகை விற்பனையாளர் சங்கத்தலைவர் டத்தோ முனியாண்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகை துறை சார்ந்து பலர் தங்களது வாழ்வாதாரத்தை நம்பியுள்ளார்கள். அந்த நிலையில் தமிழ்ப்பத்திரிகைகள் தங்களது விற்பனைய பெருக்க வழி வகை செய்யலாம். ஆனால் அதற்காக ஒரு பத்திரிகையை அழித்து விட்டு தங்களை வளர்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் அது தவறான வழி காட்டுதலுக்கும், நமது நோக்கத்தை சிதைக்கும் வண்ணமும் ஆகி விடும். ஒரு பத்திரிகையில் வரும் செய்திகள் மற்ற பத்திரிக்கையை தொடர்பு படுத்தாமலும், அந்த மாதிரியான செய்திகள் சார்ந்து மற்ற பத்திரிகைகளில் விமர் சனம் செய்யாமல் இருத்தலும் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.நமது நோக்கத்தில் இருந்து பின்வாங்காது சமுதாய சேவையாற்றுவோம். அதே நேரத் தில் பத்திரிகை விற்பனையை அதிகரிப்பது தொடர்பிலும் முயற்சியை மேற்கொள்வோம். மாறாக அதனை விடுத்து வேறுவிதமான போக்கில் எதனையும் மேற்கொள்ளாது இருப்போம் என்றார் அவர். எந்த மாதிரியான சூழல்கள் வந்தாலும் கட்சிகள், அரசியல் பேதமின்றி பத்திரிகை தர்மத்தை நிலை நாட்டுவோம். எந்த கட்சியாக இருந்தாலும் சரி, சமு தாயம் என்று வரும் பொழுது இந்தியர்களாக இருப்பதே சரியானதொரு நிலைப்பாடு ஆகும். அந்த சூழலில் தமிழ்ப் பத்திரிகைகள் சமுதாய நலன் சார்ந்து செயல்பட வேண்டும். சிலாங்கூர் மாநில பத்திரிகை விற்பனையாளர் சங்கத்தலைவர் என்ற முறையில் என் மனதில் எழுந்த இந்த நெருடலை வெளிப் படுத்த கடமைப்பட்டுள்ளேன். ஒன்றுபட்டு பத்திரிகை துறைக்கும்,சமுதாய நலனுக்கும் பாடுபடுவோம் என டத்தோ முனியாண்டி தமதறிக்கையில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்