சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக்கிற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிரந்தர குடியிருப்புவாசி அந்தஸ்தை மலேசிய அரசாங்கம் வழங்கியதாக உறுதிசெய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, மலேசியாவிற்கான அவ ரின் வருகை குறித்த விசாரணை தொடரும் என்று இந்திய சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பெர்காசா ஏற்பாட்டிலான ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதும், அதில் அவருக்கு கௌரவ உறுப்பியத்துடன், விருது வழங்கப்பட்டதும் தங்களுக்கு தெரியும் என்று ஸாஹிருக்கு எதிராக ஜாமின் பெற முடியாத கைது வாரண்டை பெற்ற இந்தியாவின் அமலாக்க இயக்ககம் கூறியது. நாங்கள் அவரின் வருகையை ஆராய்கிறோம் என்று அந்த இயக்கத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் அதிகாரி கூறியதாக புதுடில்லியின் தி இந்துஸ் தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருப்பதை தி மலாய் மெயில் நேற்று மேற்கோள் காட்டியது. மலேசியாவுடனான பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கையில் கைது வாரண்ட் ஓர் அம்சமாக இடம்பெறவில்லை என்ற போதிலும், அதன் கீழ் தங்களுக்கு உள்ள சலுகைகளை இந்தியா தொடர்ந்து ஆராயும் என்று அந்த அதிகாரிகள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடரும் என்று மற்றுமோர் அரசாங்க அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இம் மாத தொடக்கத்தில், மும்பாயில் உள்ள ஒரு நீதிமன்றம் ஸாஹிர் நாயக்கிற்கு எதிராக ஜாமின் பெற முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது. பொரு ளாதாரக் குற்றச்செயல்களை முறியடிக்கும் பொறுப்பேற்றுள்ள, இந்திய நிதியமைச்சின் கீழான அமலாக்க இயக்கம் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவருக்கு எதிராக அந்த கைது வாரண்டை வெளியிட்டது. கடந்த வாரம், மும்பாயில் உள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனத்தின் கீழான சிறப்பு நீதிமன்றம், பயங்கரவாதம் தொடர்பாக ஸாஹிருக்கு எதிராக மற்றுமொரு ஜாமின் பெற முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது. இதற்கு முன்பு ஸாஹிருக்கு எதிராக மூன்று சம்மன்கள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை என்று இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது. தற்போது மலேசியாவில் தங்கியிருக்கும் அந்த சமய போதகர் இந்தியாவிற்கு திரும்புவதற்காக அனைத்துலக போலீசின் உதவி நாடப்படும் என்றும் அது கூறியுள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ஸாஹிர் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்