குழந்தை காப்பகங்களிலும் பராமரிப்பு இல்லங்களிலும் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழுமானால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புகள், உடனே புகார் செய்யலாம் என்று துணை மகளிர் மேம்பாட்டு அமைச்சர் டத்தின் படுகா சியுவ் மெய் பன் அறைகூவல் விடுத்துள்ளார். மேலும் புகார்களை தமிழ் மொழி யிலேயே அனுப்பலாம் என்று துணையமைச்சர் நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்தார். புகார்களை பெறும் பிரிவு 24 மணி நேரமும் இயங்குகிறது. பரிவுமிக்க எண் 15999 வழியாக புகார்களை அனுப்பி வைக்கலாம். விவகாரம் அவசர அவசி யமானது என்று புகார் வழி தெரிய வந் தால் சமூக நல இலாகா உடனே நடவடிக்கை எடுக்கும். குழந்தை வளர்ப் பகங்கள், பராமரிப்பு இல்லங்களை நடத்துவோர், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை கடைப் பிடிக்க வேண்டும். சிறுவர் சிறுமியர் பாதுகாப் பிற்கு அதீத முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது கட்டாயமான ஒன்று. குழந்தை வளர்ப்பகங்கள் தரமான சேவையை வழங்குவது முக்கியம். சட்டவிதிகளை மீறும் இல்லங் களுக்கு இலாகா எழுத்துப்பூர்வ உத்தரவுகளை பிறப்பிக்கும். 9 குழந்தை வளர்ப்பகங்கள் மற்றும் மூன்று பராமரிப்பு இல் லங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு இழுத்து மூடப் பட்ட இல்லங்களும் உண்டு, 83 குழந்தை வளர்ப்பகங்கள், 18 பராமரிப்பு இல் லங்கள் ஆகியவற் றின் பதிவும் ரத்தாகியுள்ளது. சிறார் சட்டத்திருத்தம் இவ் வாண்டு ஜனவரி முதல் அம லுக்கு வந்துள்ளது. உடல் ரீதியில் மற்றும் மன ரீதியில் சிறார்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை. சட்டத் திருத்தம் இதற்கு வகை செய்கிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்