பாலர் பள்ளிக்குச் சென்ற ஆறு வயது சிறுவன் வேனி லேயே உறங்கி விட்டதை அறியாத வேன் ஓட்டுனர் வண் டியைப் பூட்டிச் சென்று விட் டதால் 3 மணிநேரமாக சிக்கி கொண்டிருந்த சிறுவன் கடும் வெப்பம் தாக்கியதால் உயிரிழந்தான். முகமட் இக்ராம் டானிஸ் எனும் அச்சிறுவன், ரவாங்கில் உள்ள பண்டார் கண்ட்றி ஹோம்ஸில் இருந்து அவ னது பாலர் பள்ளிக்குச் செல்ல நேற்று முன்தினம் மாலை 2 மணிக்கு வழக்கம் போல வேனில் ஏறி சென் றுள்ளான். ஆனால் செல்லும் வழியி லேயே அச்சிறுவன் அயர்ந்து தூங்கிவிட, சிறுவர்கள் அனை வரும் இறங்கியதைப் பார்த்த ஓட்டுனர் வேனைக் கொண்டு சென்று வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். மாலையில் 5 மணிக்கு சிறுவர் களைப் பாலர் பள்ளியிலிருந்து ஏற்றி வர கிளம்பிய 21 வயது வேன் ஓட்டுனர், சிறுவர் இக்ராம் வேனில் மயங்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவனை அருகில் இருந்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றபோது கடும் வெப்பம் தாக்கி அவன் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். ஓட்டுனரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீசார், சிறுவர் சட்டத்திற்கு கீழ் வழக்கை விசாரித்து வருகின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்