img
img

தொகுதிக் கூட்டங்களுக்கு சாப்பிடத்தான் வருகிறார்களா?
செவ்வாய் 25 ஏப்ரல் 2017 18:44:47

img

(சுங்கை)அண்மையில் இங்குள்ள ம.இ.கா சுங்கை கிளை ஆண்டு பொதுக்கூட்டத்தில் தொகுதி செயலாளர் கு.முனியாண்டி, தொகுதி கூட்டங்களுக்கு வரும் கிளைத் தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் சாப்பிடத்தான் வருகிறார்கள் என்றும் கேள்விகள் எதுவும் கேட்ப தில்லை என பேசியதால் கிளைத் தலைவர்கள் மிகவும் கொதிப் படைந்துள்ளதாக தெரிகிறது. அன்று நடைபெற்ற கூட்டத் தில் கேள்வி நேரத்தின் போது, அக்கிளையின் உறுப்பினர் ஒருவர் தெக்கூன் கடனுதவி குறித்து கிளைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவ் வேளையில் மாநில பிரதிநிதியாக வந்திருந்த மாநில செயலாளர் தங்கராஜு பதில்கூறிக் கொண் டிருக்கையில் இடைமறித்த தொகுதி செயலாளர் கிளைத் தலைவர்கள் கூட்டங்களுக்கு சாப்பிடத்தான் வருகிறார்கள் எனக் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அக்கிளையின் தலைவர் குணசேகரன் கூறுகையில், கேள்விக்கு பதிலளிக்க வேண்டியவர் பேச முற்படுவதற்கு முன் மூக்கை நுழைத்த தொகுதிச் செய லாளரின் செய்கை கண்டிக்கத்தக்கது என்றார். உறுப்பினரின் கேள்விக்கு சொந்த கிளைத் தலைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என கூறியிருக் கலாம். அதை விடுத்து தொகுதி கூட்டங்களில் கிளைத் தலைவர்கள் கேள்விகள் எந்தவிதமான கேள் விகளையும் கேட்பதில்லை என்றும் கூட்டம் முடிந்ததும் சாப்பிடத்தான் வருகிறார்கள் என அதிகப் பிரசங்கித்தனமாக பேசியிருக்கக் கூடாது என்றார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் தங்கராஜு, தஞ்சோங் மாலிம் தொகுதியின் துணைத் தலைவர் டத்தோ பெட்ரோஸ், தொகுதி செய லாளர் கு.முனி யாண்டி, தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் சுரேஷ், கி.ரவி ஆகியோருடன் கிளைத் தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். தொகுதி செயலாளரின் இத்தகைய குற்றச் சாட்டினால் அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயடைத்து போனதோடு, ஒட்டு மொத்த கிளைத் தலைவர்களையும் அவர் பொதுவாக சாடியுள்ளது பலரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img