(அலோர் ஸ்டார்): குருவியை குறி வைத்து சுட்டதில் சிறுமிக்கு உடலில் குண்டடி பட்ட விவகாரத்தில் போலீசார் மூன்று நபரை விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் பொக்கோ சேனாவிலுள்ள கம்போங் லுப்போக் கெரியாங்கிலுள்ள வீட்டில் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட துப்பாக்கியிலிருந்து 13 குண்டுகள் வெளியாகியுள்ளது. இதனால் நூர் ஷாஹிடா பாக்கார் (வயது 12) எனும் சிறுமிக்கு தொடை, கால், கை, தலை ஆகிய பகுதியில் குண்டடி பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி இங்குள்ள சுல்தானா பஹாஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தன்று அச்சிறுமி தன் உடன் பிறப்புகளுடனும் அம்மாவுடனும் வீட்டின் சமையல் அறையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.வீட்டுக்குப் பின்னால் குருவிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவர் தவறுதலாக சுட்டதில் துப்பாக்கி தோட்டாக்கள் அச்சிறுமியின் வீட்டை நோக்கி பாய்ந்துள்ளது. பின் வாசல் கதவு திறந்திருந்ததால் அச்சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியுள்ளார். வீட்டுக்குப் பின்னால் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டு வீட்டுக்கு முன்னால் இருந்த அச்சிறுமியின் அப்பா சமையல் அறைக்கு வந்துள்ளார். அங்கு பிள்ளைகளும் மனைவியும் தரையில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே துப்பாக்கியை காட்டி அந்த மூவரும் சிறுமியின் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் 46,52,74 வயதுடைய அந்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 74 வயது ஆடவருக்கு சொந்தமான அந்த துப்பாக்கிக்கான ஆவணம் அவரிடம் உண்டு. அவருக்குத் தெரியாமல் அவரின் மகன் அத்துப்பாக்கியை பயன் படுத்தியுள்ளதாகக் கூறியதால அவர் விடுவிக்கப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரோஸி ஜிடின் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்