கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் பேங்க் நெகாரா மலேசியாவில் அந்நிய செலாவணி மாற்றத்தில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து தமக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் எந்தவித விசாரணைக்கும் தாம் தயார் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுவரை தம்மை எந்தத் தரப்பும் விசாரணைக்கு அழைக்க வில்லை. இனிமேல் அழைத்தாலும் அதற்கும் தாம் தயார் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார். இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு எந்நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். விசா ரணைக்காக நீதிமன்றம் உட்பட எந்த இடத்திற்கு வரவும் தாம் தயார் என்று டாக்டர் மகாதீர் கூறினார். நேற்று முன்தினம் இரவு இங்கு தாசேக் குளுகோரில் மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வாரும், அமானா நெகாரா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹசாம் மூசா ஆகியோரும் கலந்து கொண்டனர். இவ்விவகாரம் குறித்து விசாரணையை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சீடேக் ஹசான் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை அமைத்தது. அப்போது பேங்க் நெகாரா நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டதா? என்பதை கண்டறிவதற்கே அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருந்தார். இதனிடையே, அண்மைக்காலமாக பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியைச் சேர்ந்த அதிகமான உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருவது குறித்து கருத்துரைத்த அவர், அக்கட்சி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் நினைத்தால் அவர்கள் தாராளமாக அக்கட்சியிலிருந்து வெளியேறலாம் என்றார். டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர் என்றார். கடந்த வாரம் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் செயலாளர் கமாருல் அஸ்மான் சுமார் 821 உறுப்பினர்களுடன் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். கமாருல் அஸ்மான், பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியை தோற்றுவித்த எழுவரில் ஒருவர் ஆவார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்