img
img

இணையத் தள மோசடிப் பேர்வழிகள்!
திங்கள் 24 ஏப்ரல் 2017 16:32:01

img

வருடந்தோறும் இணையத்தள மோசடிப் பேர்வழிகளின் ஏமாற்று செயலால் நூற்றுக்கணக்கான மலேசியர்கள் பாதிப்புக்குள் ளாகி வருகிறார்கள். பல லட்சம் வெள்ளி இழப்பிற்கு பாதிக்கப் பட்டோர் உட்பட்டுள்ளனர். இணையத்தள மோசடிப் பேர்வழிகளால் பாதிக் கப்பட்டவர்கள் பலரிடமிருந்து தங்களுக்கு பரவலாக புகார் வந்துள்ளதாக மத்திய போலீஸ் வர்த்தக குற்ற வியல் இயக்குநர் கமிஷனர் டத்தோ அக்ரில் சானி அப்துல்லா தெரிவித்தார். வாரந்தோறும் நூற்றுக்கணக் கான புகார்கள் வந்து குவிகின்றன. புகார் செய் யாத பலர் உண்டு. இவற்றை எல்லாம் சேர்த்து கணக்கிட்டால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை பல மடங்கு கூடுதலாக இருக்கலாம். அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று அள்ளிவிடும் மோசடிப் பேர்வழிகளின் வலையில் விழுந்து வீணாக பாதிப்புக்கு ஆளாக வேண்டாம் என்று டத்தோ அக்ரில் சம்பந் தப்பட்ட தரப்பினரை கேட்டுக் கொண்டார். பாதிப்புக்கு உள்ளானவர்கள் போலீசில் புகார் செய்வதற்கு தயக்கம் காட்டலாகாது. புகாரின் அடிப்படையில் மட்டுமே போலீஸ் புலனாய்வு செய்ய முடியும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img