குளுவாங் ஜாலான் பெல்டா கஹாங்கில் டிரெய்லர் லோரி ஒன்றின் டயர்கள் கழன்று எதிரே வந்த வாகனம் ஒன்றை மோதியதைத் தொடர்ந்து வாகனத்தில் பயணித்த சஹாரா அபு (வயது 62) எனும் மாது விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மாண்டதோடு வாகனத்தை செலுத்திய அம்மாதுவின் மகள் ஜூலியேசா பர்மான் (வயது 23) கடுமையான காயங்களுடன் இஞ்சே பெசார் ஹாஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று இங்கு இதனை தெரிவித்த குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் லஹாம் விபத்து நடப்பதற்கு முன்னர் தாயும் மகளும் பெல்டா கஹாங் தீமோரிலுள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். சம்பவ இடத்தில் செம்பனை பழங்களை ஏற்றி வந்த லோரியின் பின் டயர்கள் எதிர்பாராமல் லோரியிலிருந்து கழன்று சாலையின் நடுத் தடத்திற்கு சென்ற தோடு எதிரே வந்த பெரோடுவா மைவி வாகனத்தை மோதியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்